Read in English
This Article is From May 21, 2019

மின்னணு வாக்குப்பதிவை ஒப்புகைசீட்டு இயந்திரத்துடன் 100% ஒப்பிடக் கோரிய மனு தள்ளுபடி

General Elections 2019: இந்த மனு உச்சநீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த சரிபார்க்கும் செயல்முறை அறிவினமற்ற செயல் என்று கூறியது.

Advertisement
இந்தியா Edited by
New Delhi:

வாக்கு எண்ணிக்கையின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பதிவான வாக்குகளை விவிபாட் சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். 100 சதவீத இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்த ஒரு அமைப்பு பொதுநல மனுவாக தாக்கல் செய்தது. 

இந்த மனுவில் இனி வரும் தேர்தல்களில் மின்னணு இயந்திரத்தை ஆப்டிகல் ஸ்கேனர் பேலட் மிஷின்களாக மாற்ற வேண்டும் என்று கோரியுள்ளனர். இதனால் ஆப்டிகல் ஸ்கேன் வாக்களிப்பு இயந்திரம் ஒரு வாக்காளர் தான் எந்த சின்னத்தை தேர்ந்தெடுக்க வேண்டுமோ அந்த சின்னத்தை அழுத்தினாலே வாக்கு அளித்ததாக ஏற்றுக் கொள்ளும் வகையில் மாற்ற வேண்டும் எனக் கோரினர். 

இந்த மனு உச்சநீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த சரிபார்க்கும் செயல்முறை அறிவினமற்ற செயல் என்று கூறியது.

Advertisement

இதற்கு முன்னதாக 50 சதவீத வாக்கு எண்ணும் இயந்திரங்களுடன் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் வாக்குகளையும் சரிபார்க்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 21 எதிர்கட்சிகள் மனு தாக்கல் செய்து இருந்தன.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஒரு மக்களவை தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதி ஒவ்வொன்றிலும், தலா 5 வாக்குச்சாவடிகளில்  ஒப்புகைச்சீட்டையும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி, எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனுவை, கடந்த மே 7 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Advertisement
Advertisement