உச்ச நீதிமன்றத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச நீதிபதிகளின் எண்ணிக்கை 31
New Delhi: உச்ச நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகளை உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எம்.ஆர்.ஷா, குஜராத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆர்.எஸ். ரெட்டி, மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஹேமந்த் குப்தா, திரிபுரா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் நீதிபதிகளாக பொறுப்பேற்றுக் கொண்டால் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 28-ஆக உயர்ந்து விடும். உச்ச நீதிமன்றத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச நீதிபதிகளின் எண்ணிக்கை 31 - ஆக உள்ளது.
இருப்பினும், உச்ச நீதிமன்ற நீதிபதிள் ஜோசப் குரியன், மதன் பி.லோகுர், ஏ.கே. சிக்ரி ஆகியோர் விரைவில் ஓய்வுபெற உள்ளதால் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 25-ஆக குறையும்.