பத்மநாபசாமி கோயில் 18 ஆம் நூற்றாண்டில் அதன் தற்போதைய வடிவத்தில் மீண்டும் கட்டப்பட்டது.
New Delhi: சில ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலம் திருவணந்தபுரத்தில் உள்ள பத்மநாப கோயிலின் ரகசிய அறையிலிருந்து பெரும் மதிப்புள்ள தங்கம் போன்ற விலையுயர்ந்த ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் மீதமுள்ள ரகசிய பெட்டியை திறக்க முடிவெடுக்கப்பட்டது.
ஆனால், நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையடுத்து, வரலாற்று சிறப்புமிக்க கோயிலின் நிர்வாகம் மற்றும் மேலாண்மை தொடர்பான சர்ச்சை கடந்த ஒன்பது ஆண்டுகளாக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகும், இந்த கோயில் முன்னாள் அரச குடும்பத்தினரால் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு அறக்கட்டளையால் தொடர்ந்து நிர்வகிக்கப்படுகிறது. இந்நிலையில் திருவாங்கூரின் முன்னாள் அரச குடும்பம் ஒரு புராண சாபத்தால் பெட்டகத்தை திறப்பது துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என்று வாதிட்டனர்.
இதன் காரணமாக கேரள உயர்நீதிமன்றத்தின் 2011 தீர்ப்பை மாற்றி, பத்மநாபசுவாமி கோயிலின் நிர்வாகத்தை நடத்துவதில் முன்னாள் அரச குடும்பத்தின் உரிமைகளை உச்ச நீதிமன்றம் தற்போது உறுதி செய்துள்ளது.
நீதிபதிகள் யு.யூ.லலித் மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வானது, கோயிலை நிர்வாகிக்க அரச குடும்பத்தினர் இறுதிக் குழு அமைக்கும் வரை திருவனந்தபுரத்தின் மாவட்ட நீதிபதி, பத்மநாபசாமி கோயிலின் விவகாரங்களை நிர்வகிப்பதற்கான நிர்வாகக் குழுவுக்கு தலைமை தாங்குவார் என்ற உத்தரவினை தற்போது வழங்கியுள்ளது. ரகசிய பெட்டியை திறப்பதற்கான இறுதி முடிவினை அரச குடும்பம் மேற்கொள்ளும் என உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.