This Article is From Sep 26, 2018

அரசின் திட்டங்களைப் பெற ஆதார் கட்டாயமா?-முடிவை இன்று அறிவிக்கிறது உச்சநீதிமன்றம்

Aadhaar Case Verdict: 120 கோடி இந்தியர்களின் அந்தரங்க உரிமையை பாதிப்பதாக கூறி அரசின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது

அரசின் திட்டங்களைப் பெற ஆதார் கட்டாயமா?-முடிவை இன்று அறிவிக்கிறது உச்சநீதிமன்றம்

அரசின் திட்டங்களை பெறுவதற்கு ஆதாரை கட்டாயமாக்கி வருகிறது மத்திய அரசு

ஹைலைட்ஸ்

  • 27 தரப்பினர் தொடர்ந்த வழக்கில் நாளை முக்கிய உத்தரவு
  • மே மாதம் முதல் நடந்த விசாரணையை தொடர்ந்து நாளை தீர்ப்பு
  • கடந்த ஜனவரி முதல் மொத்தம் 38 நாட்கள் இந்த வழக்கு விசாரணை நடந்துள்ளது
New Delhi:

Aadhar Case: ஆதாருக்கு அரசியலமைப்பு அந்தஸ்து உள்ளதா என்பது குறித்தும், நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அவசியமா என்பது தொடர்பாகவும் 27 மனுதாரர்கள் தொடர்ந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. கடந்த மே மாதத்திற்கு பின்னர் தொடர்ச்சியாக 4 மாதங்களுக்கு வழக்கு விசாரணை நடந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் ஆரம்பித்த இந்த வழக்கானது மொத்தம் 38 நாட்களுக்கு விசாரிக்கப்பட்டுள்ளது. மிக நீண்ட நாட்களாக விசாரிக்கப்பட்ட வழக்கில் ஆதார் வழக்கு இரண்டாம் இடத்தில் உள்ளது. முன்னதாக 1973-ல் நடந்த கேசவானந்த பாரதி வழக்குதான் மிக நீண்ட நாட்களுக்கு விசாரிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை வரைமுறையின்றி திருத்த நாடாளுமன்றத்திற்கு அனுமதி உண்டா என்பது தொடர்பாக இந்த வழக்கு நடந்தது.

ஆதார் வழக்கை பொறுத்தவரையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 பேர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதாரை கட்டாயமாக்கினால் அது அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள அந்தரங்க உரிமையில் தலையிடுவதற்கு சமம் என்று கூறி 27 மனுதாரர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

வங்கிச் சேவை, பான் கார்டு, செல்போன் சேவை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டவற்றை பெறுவதற்கு மத்திய அரசு ஆதாரை கட்டாயமாக்கியுள்ளது. பயோமெட்ரிக் தகவல்கள், கைரேகை, கண் விழித்திரை தகவல்கள் உள்ளிட்டவை அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு கட்டாயம் அல்ல என்றும் இதன் மூலம் தகவல் திருடப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

நலத்திட்டங்களை வழங்கும்போது முறைகேடுகளை தவிர்ப்பதற்காக ஆதாரை கட்டாயமாக்கியுள்ளோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே நேரம் தகவல் திருடப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.