This Article is From May 15, 2020

மதுக்கடைகளை மூடக் கோரிய பொதுநல வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

இந்த மனுக்களை  விசாரணைக்கு ஏற்க மறுப்பு தெரிவித்து உச்சநீதிமன்றம், மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மதுக்கடைகளை மூடக் கோரிய பொதுநல வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

மதுக்கடைகளை மூடக் கோரிய பொதுநல வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

அரசின் கொள்கை முடிவில் தலையிட விரும்பவில்லை எனக்கூறி, மதுக்கடைகளை மூடக் கோரிய பொதுநல வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதம் 24-ம்தேதியில் இருந்து அமலில் உள்ளது. இதனால் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில் தமிழக அரசு மே.7ம் தேதி முதல் மீண்டும் மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு வழக்குத் தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் டாஸ்மாக் கடையை திறக்க தடை விதிக்க முடியாது என்று தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 7ம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் தமிழகத்தில் சென்னையை தவிர்த்து மற்ற அனைத்து இடங்களிலும் திறக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுக்களை வாங்கிசென்றனர். 

மக்களின் அத்தியாவசிய தேவைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள சூழலில், அத்தனையையும் தகர்த்து ஆயிரக்கணக்கானோர் முண்டியடித்து மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் பொது முடக்கம் முடியும் மே 17-ம்தேதி வரையில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்து, ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்வதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இதனிடையே, மதுபானக் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படாததால் மதுக்கடைகளை தற்காலிகமாக மூடக் கோரிய பொதுநல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த மனுக்களை  விசாரணைக்கு ஏற்க மறுப்பு தெரிவித்து உச்சநீதிமன்றம், மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபாரம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்தது.

.