Read in English
This Article is From Sep 17, 2018

தடை செய்யப்பட்டிருந்த சாரிடான் விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி!

328 மருந்துகளின் தயாரிப்பில் மோசடிகள் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது. எனவே அந்த மருந்துகளை தடை செய்யுமாறு நிபுணர் குழு அரசுக்கு பரிந்துரைத்தது.

Advertisement
இந்தியா

இந்திய மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியத்தின் குழு, மருந்துகளை ஆய்வுக்கு உட்படுத்தியது

New Delhi:

மத்திய அரசால் தடை செய்யப்பட்டிருந்த சாரிடான் உள்ளிட்ட மேலும் 2 மருந்து பொருட்களை விற்பனை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகளை குறிப்பிட்ட விகிதத்தில் சேர்த்து தயாரிக்கப்படும் (எப்.டி.சி.) மருந்துகளை, இந்திய மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் சோதனை செய்தது. அப்போது 344 வகையான மருந்துகள் குறிப்பிட்ட விகித சேர்க்கை இன்றியும், தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டது

மேலும், இந்த மருந்துகளால் உடல் நலத்துக்கு கேடு என்று தெரிவிக்கப்பட்டது. எனவே, கடந்த 2015-ம் ஆண்டு இது போன்ற மருந்துகள் தடை செய்யப்பட்டன. இதை எதிர்த்து சில மருந்து நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த மருந்துகளின் தயாரிப்பு குறித்து மீண்டும் ஆய்வு செய்யுமாறு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

அதனை தொடர்ந்து, இந்திய மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியத்தின் குழு மீண்டும் இந்த மருந்துகளை ஆய்வுக்கு உட்படுத்தியது. இதில் 328 மருந்துகளின் தயாரிப்பில் மோசடிகள் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது. எனவே அந்த மருந்துகளை தடை செய்யுமாறு நிபுணர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.

Advertisement

இந்நிலையில், சாரிடான், டார்ட் வலி நிவாராணி, பிரிட்டான் ஆகிய மூன்று மருந்துகளுக்கும் விதிக்கப்பட்ட தடையை நீக்கி விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது.

Advertisement