This Article is From Dec 16, 2019

வன்முறையை நிறுத்தினால் வழக்கை உச்ச நீதிமன்றம் நாளையே விசாரிக்கும்!

வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங் மற்றும் கொலின் கோன்சால்வ்ஸ் ஆகியோர் மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விசாரணை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதிகளை இரு பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வைக்குமாறு உச்சநீதிமன்றத்தை கேட்டுக்கொண்டனர்.

வன்முறையை நிறுத்தினால் வழக்கை உச்ச நீதிமன்றம் நாளையே விசாரிக்கும்!

ஜாமிய பல்கலைக்கழகம் மற்றும் அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல் குறித்த வழக்கை நாளை விசாரிப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

New Delhi:

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை நிறுத்தி அமைதி காத்தால் மட்டுமே வழக்கை விசாரிப்போம் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறியுள்ளார். 

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஜாமிய பல்கலைக்கழக மற்றும் அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல் குறித்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். 

மேலும், மாணவர்களாக இருப்பதால், அவர்கள் சட்டம் ஒழுங்கை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளலாம் என்று அர்த்தமல்ல. முதலில் அங்கு அமைதி நிலவட்டும், இந்த மனநிலையில் நாம் எதையும் தீர்மானிக்க முடியாது என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங் மற்றும் கொலின் கோன்சால்வ்ஸ் ஆகியோர் மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விசாரணை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதிகளை இரு பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வைக்குமாறு உச்சநீதிமன்றத்தை கேட்டுக்கொண்டனர். 

யார் கலவரம் செய்தனர், யார் அமைதியாக போராடினர் என்பதை நாங்கள் இப்போது சொல்ல முடியாது என்றும் வன்முயைான போராட்டங்களை அரசியல் சாசனம் அனுமதிக்கவில்லை என நீதிபதி தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து, வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கூறும்போது, "நாடு முழுவதும் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை குறித்தே நாங்கள் விசாரிக்க கோருகிறோம். இந்த வகையான வன்முறையை சம்பவத்தை உச்சநீதிமன்றம் விரைந்து விசாரிக்க வேண்டும். இது ஒரு கடுமையான மனித உரிமை மீறல் என்று அவர் கூறினார்.

மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை செய்யப்பட வேண்டும் என்று வாதிட்டதனர். 

தொடர்ந்து, கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவே காவல்துறை உள்ளது. இதில் நாம் என்ன செய்ய முடியும் என்பதை பார்ப்போம். நாங்கள் அமைதி வழியில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. இந்த விவகாரத்தை வீதியிலே முடிக்க நினைப்பவர்கள் நீதிமன்றத்திற்கு வர வேண்டாம் என்று தெரிவித்தார். 

.