This Article is From Dec 11, 2018

"பாலியல் தொல்லைக்கு ஆளானவர்களின் பெயரை வெளியிடும் ஊடகங்களுக்கு தடை" உச்ச நீதிமன்றம்

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களின் பெயரை, அவர்களின் பெற்றோர்கள் அனுமதியளித்தாலும் வெளியிடக்கூடாது.

சமூக புறக்கணிப்புக்கு ஆளாகலாம் என்ற அடிப்படையில் இந்தச் சட்டத்தை கொண்டுவந்துள்ளததாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

New Delhi:

உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பில் ''பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களின் அடையாளத்தை வெளியிடும் ஊடகம் மற்றும் சட்ட அமைப்புகளுக்கு தடை விதிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது. மேலும் "அவர்களது பெயரை பொதுக்கூட்டங்களிலும், சமூக வலைதளங்களிலும் பயன்படுத்தக்கூடாது" என்று வலியுறுத்தியுள்ளது.

காவல்துறை மற்றும் தடயவியல் அதிகாரிகளும் பாதிக்கப்பட்டவரின் பெயரை வெளியிடக்கூடாது. ஒருவேளை அவர்களின் பெற்றோர்கள் அனுமதியளித்தாலும், அவர்கள் பெயரை வெளியிடக்கூடாது. பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள் மீண்டும் அதே பாதிப்புக்குள்ளாகலாம் மற்றும் சமூக புறக்கணிப்புக்கு ஆளாகலாம் என்ற அடிப்படையில் இந்தச் சட்டத்தை கொண்டுவந்துள்ளததாக கூறியுள்ளது.

"இதனை மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் உடனடியாக அமல்படுத்த வேண்டும்".மேலும் "பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ கவுன்சிலிங் வழங்கப்பட வேண்டும்" என்றும் கூறியுள்ளது. 

.