Read in English
This Article is From Aug 11, 2020

சொத்து பங்கீட்டில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம்

2018ம் ஆண்டில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், மகனைப் போலவே, மகளுக்கும் சொத்தில் சம பங்கு என்பது அவரது உரிமை என்று கூறியிருந்தது. 

Advertisement
இந்தியா Posted by

சொத்து பங்கீட்டில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம்

New Delhi:

ஒரு பெண் மகளாக குடும்ப சொத்தில் சம பங்கு கோரலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2005ல் இந்து வாரிசு உரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக நீதிபதி அருண்குமார் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் கூறியதாவது, ஒருமுறை மகள் என்றால், அவர் வாழ்நாள் முழுவதும் மகள் தான்.

ஒரு மகன் திருமணம் செய்து கொள்ளும் வரை மகன் தான். தந்தை உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் பரம்பரை சொத்தில் சம பங்கு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பரம்பரை சொத்தில் மகள்களுக்கு சம உரிமை வழங்கிய இந்து வாரிசு திருத்தச் சட்டம் 2005 தொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டன. இதில், 2016 மற்றும் 2018ல் உச்ச நீதிமன்றத்தின் மாறுபட்ட தீர்ப்புகளால் கேள்வி எழுந்தது. இந்து வாரிசு சட்டம், 1956ன் பிரிவு 6ன் விளக்கம், பின்னர் 2005ல் திருத்தப்பட்டது. 

2018ம் ஆண்டில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், மகனைப் போலவே, மகளுக்கும் சொத்தில் சம பங்கு என்பது அவரது உரிமை என்று கூறியிருந்தது. 

Advertisement

2005ம் ஆண்டில் சட்டம் திருத்தப்பட்டபோது  பெண்ணின் தந்தை உயிருடன் இருந்தாரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், பிரிக்கப்படாத குடும்பச் சொத்தில் ஆணுக்கு நிகராக, பெண்ணுக்கும் சமமான பங்கு உள்ளது என்று நீதிமன்றம் இன்று கூறியுள்ளது.
 

Advertisement