Read in English
This Article is From Sep 27, 2018

அக்.29ல் அயோத்தியா வழக்கின் மறுவிசாரணை! - உச்சநீதிமன்றம்

மசூதியை சுற்றியுள்ள பகுதியை அரசுக்கு சொந்தமானது என்ற விதியை மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் மறுத்தது

Advertisement
இந்தியா ,

கடந்த 1994 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம், நமாஸ் செய்ய முஸ்லீம்களுக்கு மசூதி அவசியம் இல்லை என்றது

New Delhi:

முஸ்லீம்களுக்கு நமாஸ் செய்ய மசூதி அவசியமா என்பது குறித்தான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பான வழக்கில் கடந்த 1994 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம், நமாஸ் செய்ய முஸ்லீம்களுக்கு மசூதி அவசியம் இல்லை. நமாஸ் என்பது எந்த இடத்தில் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். எனவே, மசூதி இருக்கும் ஓர் இடத்தை அரசு தேவைப்பட்டால் கையகப்படுத்தலாம் என்று தீர்ப்பளித்துள்ளது.

1992 ஆம் ஆண்டு, ஆயோத்யாவில் இருக்கும் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதியை, வலதுசாரி அமைப்பினர் இடித்தனர். அதற்கு அவர்கள், மசூதி இருக்கும் இடத்தில் தான் ராமர் பிறந்தார், எனவே அங்கு ராமருக்கு கோயில் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து அலாகாபாத் நீதிமன்றம் 2010-ல், மசூதி இருந்த இடத்தை 3 பகுதிகளாக பிரித்தது. அதில் ஒரு பகுதியை முஸ்லீம்களுக்கும் இன்னொரு பகுதியை இந்துகளுக்கும் கொடுத்தது நீதிமன்றம். இதில் நிலத்தின் முக்கியப் பகுதி இந்துகளுக்குத்தான் கொடுக்கப்பட்டது.

Advertisement

அலாகாபாத் நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிராக, இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பை வாசித்தது. அதில், அனைத்து மத வழிபாட்டு தலங்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும். நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்கும். அயோத்தி பிராதன வழக்கின் மறு விசாரணை அக்-29.ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

 

Advertisement
Advertisement