Read in English
This Article is From Oct 17, 2019

கோவை சிறுமி கொலை வழக்கு : மரண தண்டனை சீராய்வு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

ஆகஸ்டு 1-ம் தேதி, 10 வயது சிறுமியை சக குற்றவாளியுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர். சிறுமியையும் சகோதரனையும் வாய்க்காலில் எறிந்து கொலை செய்தனர்.

Advertisement
தமிழ்நாடு Translated By

குற்றவாளி மனோகரனின் மரணதண்டனைக்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டது. (File)

New Delhi:

கோவையில் சிறுமியை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து,  சிறுமியின் சகோதரனையும் கொலை செய்ததற்காக உயர்நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்தது. தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி குற்றவாளி அளித்த மனுவில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. 

நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், சஞ்சீவ் கன்னா மற்றும் சூர்யா காந்த் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்கியது. ஒரு வாரத்திற்குள் எழுத்துபூர்வ சமர்பிப்புகளை தாக்கல் செய்யுமாறு மாநில வழக்கறிஞரை கேட்டுக் கொண்டது. 

“மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா. விரிவான எழுத்துப்பூர்வ சமர்பிப்பை வழங்கியிருந்தார். அதற்கு பதிலளிக்க ஒரு வாரம் காலம் கோரப்பட்டது”

Advertisement

குற்றவாளி மனோகரனின் மரணதண்டனைக்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டது. ஆகஸ்ட் 1 ம் தேதி தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி அளித்த மனுவில் வாதங்கள் கேட்கப்பட்டன. 

ஆகஸ்டு 1-ம் தேதி, 10 வயது சிறுமியை சக குற்றவாளியுடன் சேர்ந்து  பாலியல் பலாத்காரம் செய்த மனோகரனை சிறைக்கு அனுப்பியதோடு,சிறுமியையும் சகோதரனையும் வாய்க்காலில் எறிந்து கொலை செய்தனர். 

Advertisement
Advertisement