বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From Apr 16, 2019

சபரிமலைத் தீர்ப்பை தொடர்ந்து -மசூதியில் பெண்கள் நுழைய வேண்டி உச்சநீதிமன்றத்தில் மனு

குர் ஆன் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே வேறுபாடு காட்டவில்லை உண்மையைப் பற்றி மட்டுமே பேசுகிறது. ஆனால் இஸ்லாமியம் பெண்களை ஒடுக்கும் மதமாக மாறியுள்ளது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
இந்தியா ,

மசூதியில் பெண்கள் நுழைய அனுமதி வேண்டி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.

New Delhi:

மசூதிகளில் எந்தவொரு கட்டுப்பாடுமின்றி பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு,  மத்திய வக்பூ வாரியம் மற்றும் அனைத்து இந்தியா முஸ்லீம் தனிப்பட்ட சட்ட  வாரியத்திடம் “சபரிமலை தீர்ப்பின் காரணமாக நாங்கள் இந்த வழக்கை விசாரிக்கிறோம்” என்று  தெரிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்  மிக முக்கிய  தீர்ப்பு வழங்கப்பட்டது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பை வழங்கியது உச்சநீதிமன்றம்

மகாராஷ்டிராவில் இருந்து உள்ள முஸ்லீம் தம்பதியினர் கொடுத்த மனுவினை விசாரித்த போது உச்சநீதிமன்றம் மசூதியில் வணங்க முயன்ற போது தடுத்து விட்டார்களா என்று கேட்டது. 

Advertisement

இந்த மனுவை விசாரிக்க சில கேள்விகளைக் கேட்டது. “ மற்றவர்களை அனைவரையும் சமமாக நடத்த வேண்டுமென்று நீங்கள் கேட்க முடியுமா? தனிநபர்களுக்கு இது பொருந்துமா? நீங்கள் மற்றொரு குடிமக்களிடமிருந்து சமத்துவத்தை எதிர்பார்க்க முடியுமா? இந்திய மாநிலத்தில் சர்ச் மற்றும் மசூதிகளில் பாலின சமத்துவத்தை எதிர்பார்க்க முடியுமா? ஒருசிலர் உங்களின் வீட்டிற்குள் நுழைய விரும்பவில்லையென்றால் நீங்கள் போலீஸ் தலையிடுமாறு காவல்துறையினரிடம் கேட்பீர்களா? என்று நீதிமன்றம் கேள்விகளை எழுப்பியது.

இந்த மனுவை யாஸ்மீ ஜூபேர் அஹமத் பெர்ஷிடே மற்றும் ஜுபெர் அஹமத் பெர்சடே  என்ற தம்பதியினர் உச்ச நீதிமன்றத்தின் சபரிமலை தீர்ப்பினால் ஈர்க்கப்பட்டு மசூதியில் உள்ள பாலின வேறுபாட்டை எதிர்த்து மனுபோட்டதாக தெரிவித்தனர். 

Advertisement

மசோதாவில் பெண்களுக்கு சட்ட விரோதமான அரசியலமைப்பற்ற விதிமுறைகள் மற்றும், “அரசியலமைப்பின் 14,15,21, 25, மற்றும் 29 வது பிரிவுகளை மீறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

குர் ஆன் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே வேறுபாடு காட்டவில்லை உண்மையைப் பற்றி மட்டுமே பேசுகிறது. ஆனால் இஸ்லாமியம் பெண்களை ஒடுக்கும் மதமாக மாறியுள்ளது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement