This Article is From Apr 15, 2019

உங்களின் அதிகாரம் என்ன…? தேர்தல் ஆணையத்தை கேள்விகளால் துளைத்த உச்ச நீதிமன்றம்

தேர்தல் ஆணையம் இறுதியில் நீதிமன்றத்தில் “நாங்கள் அதிகாரமற்றவர்கள் தேர்தல் விதிமீறல்களை யார் மீறினாலும் அவர்களுக்கு நோட்டீஸ் வழங்குகிறோம். விதிமுறைகள் பற்றி எடுத்து சொன்னாலும்  யாரும் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை" என்று பதிலளித்தது. 

உங்களின் அதிகாரம் என்ன…? தேர்தல் ஆணையத்தை கேள்விகளால் துளைத்த உச்ச நீதிமன்றம்

தேர்தல் விதிமீறல் குறித்த ஆய்வில் உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடம் கேள்விகளை எழுப்பியது

New Delhi:

இந்திய தேர்தல் ஆணையம் குறித்து விதிமீறல்கள்  குறித்த  சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் இது குறித்து  விசாரணையை நடத்தியது. விதிமீறல்கள் குறித்து விளக்கமளிக்க தேர்தல் ஆணையத்தை நேரில் வர உத்தரவிட்டிருந்தது.

 தேர்தல் ஆணையம் சார்பாக அமித் சர்மா வாதாடினார். தேர்தல் ஆணையம் வெறுப்பு பேச்சுகளுக்கு எதிராக அதிகாரமற்று உள்ளதா… ‘பல்லற்ற' அமைப்பாக இருக்கிறாத என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடுமையாக சாடினார். 

தேர்தல் நடத்தை விதிகளை நடைமுறைப்படுத்து குறித்து தேர்தல் ஆணைய அதிகாரங்களை உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்யும். தேர்தல் பிரச்சாரங்கள் மத வழிபாட்டு எதிரான வெறுப்பு அரசியல் பேச்சுகளை பேசுபவர்களை ஆணையம் தண்டிக்க முடியுமா?

அரசியல் கட்சிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை நீதிமன்றம் கேட்டது. 

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் “நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் பிரச்சாரத்தின் போது யாராவது எதாவது பேசி விட்டால் அது குறித்த அறிக்கையினை பதிவு செய்ய வேண்டுமில்லையா…” என்று கேள்வி எழுப்பினார்.

தேர்தல் ஆணையம் எத்தனை நோட்டீஸ் வழங்கப்பட்டது என்ற பதிலை அளித்த போது “யாருக்கு எதிராக எத்தனை நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது” என்று கேள்வியெழுப்பினார்.

உத்தர பிரதேச  முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்று என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு தேர்தல் ஆணையம் “வழக்கு முடிந்து விட்டதாக” பதிலளித்தது.

தேர்தல் அதிகாரியின் வழக்கறிஞரை உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியது. “உங்கள் அதிகாரங்களைப் பற்றி அறிந்திருக்கிறீர்களா?கேள்விகளுக்குப் பதிலளிக்காவிட்டால் தேர்தல் ஆணையரைத் திரும்ப பெறுவோம்” என்று கூறியது. 

பேசவே இயலாத தேர்தல் ஆணையம் இறுதியில் நீதிமன்றத்தில் “நாங்கள் அதிகாரமற்றவர்கள் தேர்தல் விதிமீறல்களை யார் மீறினாலும் அவர்களுக்கு நோட்டீஸ் வழங்குகிறோம். விதிமுறைகள் பற்றி எடுத்து சொன்னாலும்  யாரும் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை" என்று பதிலளித்தது. 

நீதிமன்றம் “இந்த விவகாரத்தை ஆராய்ந்து பார்க்க விரும்புகிறோம். இந்த விவரங்களைப் பற்று பேசுகிற பிரதிநிதியொருவர் தேர்தல் ஆணையத்திலிருந்து வர வேண்டும்”என்று தெரிவித்தது.

இந்த மாத தொடக்கத்தில் காஜியாபாத்தில் நடைபெற்ற ஒரு பேரணியில் “பயங்கரவாதிகளுக்கு காங்கிரஸ் பிரியாணி பரிமாறுகின்றனர். ஆனால் மோடியின் படை அவர்களுக்கு துப்பாக்கி மற்றும் குண்டுகளை கொடுக்கிறது “ என்று பேசினார். 

எதிர் அரசியல் பேசுபவர்களை கடுமையாக விமர்சித்து வந்தார். உள்துறை அமைச்சர் வி.கே சிங், “ராணுவம் எந்தவொரு தனி நபருக்கும் சொந்தமானதல்ல, மாறாக நாட்டிற்கே சொந்தமானது” என்று கூறியிருந்தார். 

5 நாட்களுக்குப் பின் தேர்தல் ஆணையம் “கவனமாக செயல்படவும்”என்று யோகி ஆதித்யநாத்க்கு  எச்சரிக்கை விடுத்தது. 

.