বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From Sep 06, 2018

ஓர் பாலின ஈர்ப்புக்கு எதிரான 377வது பிரிவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்..!

ஓர் பாலின ஈர்ப்புக்கு எதிராக, அரசியல் சட்ட சாசனத்தில் உள்ள 377வது பிரிவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்

Advertisement
இந்தியா
New Delhi:

ஓர் பாலின ஈர்ப்புக்கு எதிராக, அரசியல் சட்ட சாசனத்தில் உள்ள 377வது பிரிவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். முன்னாதாக இந்த ஆண்டு நடந்த விசாரணையின் போது, “பாலினச் சேர்க்கை காரணமாக ஒருவர் அச்சத்துடன் இருக்கக் கூடாது'' என்றது உச்ச நீதிமன்றம்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு “சமூக பண்பாடு காலத்துக்கு காலம் மாறுபடும். வாழ்க்கை மாற்றத்துக்கு ஏற்றவாறு சட்டமும் தன்னை மாற்றிக் கொள்ளும்” என்றனர்.

1861-ம் ஆண்டு இயற்றப்பட்ட, 377 சட்டப் பிரிவு, இயற்கைக்கு முரணான வகையில் பாலினச் சேர்க்கையை குற்றம் என்று கூறுகிறது. இந்தச் சட்டத்தை நீதிபதிகள் கொண்ட குழு பரிசீலித்து மாற்றம் செய்ய வேண்டுமா, என்பதை நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்குமாறு, முன்னர் கூறப்பட்டிருந்தது.

Advertisement

இந்த 377 சட்டத்தின் படி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு, 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும். ஓரினச் சேர்க்கையாளர்களாக இருப்பதால் தாங்கள் எப்போதும் அச்சத்துடன் இருப்பதாக, 5 மனுதாரர்கள், நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றத்தின் தீர்ப்பின்படியே மத்திய அரசு செயல்படும் எனத் தெரிகிறது. ஓரினச் சேர்க்கையை குற்றம் என்று நிரூபிக்க மத்திய அரசு முயற்சிக்காது என்றும் தெரிகிறது. முன்னதாக 2013-ம் ஆண்டு ஓரினச்சேர்க்கையை குற்றமற்ற செயல் என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இதை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், இது நாடாளுமன்றம் எடுக்க வேண்டிய முடிவு என்று கூறியது.

Advertisement

2009-ம் ஆண்டு நடந்த வழக்கில், 377 சட்டப்பிரிவு ஒரு தனி மனிதனுக்கு வழங்கப்பட்ட உரிமையை பறிக்கும் விதமாக இருக்கிறது என்றது டெல்லி உயர்நீதிமன்றம். 377 சட்டப் பிரிவு பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது இல்லை என்ற போதிலும், சில வழக்குகளில் அப்பாவிகளை துன்புறுத்தும் ரீதியாக, போலியாக 377 வழக்கு பதியப்படுவதாகவும் நீதிமன்றத்தில் வாதம் வைக்கப்பட்டது.

Advertisement