Read in English
This Article is From Aug 13, 2018

என்.டி.டி.வி வீடியோ ஆதாரம்: உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் ‘பசுவதை’ தாக்குதல் சம்பவம்!

உத்தர பிரதேச மாநில ஹப்பூரில் பசுவதை செய்தார் என்று குற்றம் சாட்டி, குரேஷி மற்றும் சமியூதின் என்பவர்கள் மீது கும்பல் தாக்குதல் நடத்தியது

Advertisement
இந்தியா ,
New Delhi:

உத்தர பிரதேச மாநில ஹப்பூரில் பசுவதை செய்தார் என்று குற்றம் சாட்டி, குரேஷி மற்றும் சமியூதின் என்பவர்கள் மீது கும்பல் தாக்குதல் நடத்தியது. இது குறித்து என்.டி.டி.வி சார்பில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு வீடியோ ஆதாரத்தை வெளியிட்டோம். இதையடுத்து, பாதிக்கப்பட்ட நபரான சமியூதின், உச்ச நீதிமன்றத்தில் வீடியோ ஆதாரம் குறித்து தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு குறித்து விசாரிக்க நீதிமன்றத்தின் தலைமையில் புலனாய்வு குழு அமைக்க வேண்டுமா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் இன்று முடிவெடுக்க உள்ளது. மேலும், உத்தர பிரதேச காவல் துறை ‘பசுவதை’ தாக்குதல் சம்பவங்களை சரிவர விசாரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுக்குப் பிறகு, அம்மாநிலத்திலிருந்து வழக்கை மாற்றலாமா என்பது குறித்தும் நீதிமன்றம் இன்று முடிவு செய்யும். 

கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி, காசிக் குரேஷி (45) என்பவர், பசுவதை செய்தார் என்று குற்றம் சாட்டி ஒரு கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டார். அவர் தாக்கிய சம்பவம் செல்போனில் வீடியோவாக எடுக்கப்பட்டது. இந்த வீடியோ வைரலாக பரவியது. அதேபோல முதியவரான சமியூதினை ‘பசுவதை’ செய்தார் என்று கூறி இன்னொரு கும்பல் கடுமையாக தாக்கியது. குரேஷி, தாக்குதல் காரணமாக உயிரிழந்தார். அதே நேரத்தில் சமியூதின் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 

இது தொடர்பாக காவல் துறையிடம் புகார்அளிக்கப்பட்டது. சமியூதினை தாக்கிய சம்பவம் குறித்து 4 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ராகேஷ் சிசோடியா என்பவர் தான் முக்கிய குற்றவாளி. அவர் சென்ற வாரம் பிணையில் விடுவிக்கப்பட்டார். 

Advertisement

இதையடுத்து, ஹப்பூரில் இருக்கும் பஜேதா குர்ஜ் கிராமத்துக்கு என்.டி.டி.வி சார்பில் பயணப்பட்டு அவரைச் சந்தித்தோம். 

நீதிமன்றத்தில் சிசோடியா, தனக்கும் நடந்த சம்பவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார். ஆனால், கேமராவிலோ வேறு கதை.

Advertisement

அவர், ‘நான் சிறை அதிகாரிகளிடம், அவர்கள் பசுவைக் கொன்றார்கள். நாங்கள் அவர்களைக் கொன்றோம் என்றேன். நான் சிறையிலிருந்து விடுபற்ற போது, என்னை அழைத்துச் செல்ல 3, 4 கார்கள் வந்தன. என் பெயரை சொல்லி வெளியில் இருந்தவர்கள் கோஷம் எழுப்பினர். என்னை அவர்கள் அப்படி வரவேற்றனர். எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. எனது படை தயாராக இருக்கிறது. யாராவது பசுவைக் கொன்றால் அவர்களை நாங்கள் கொல்லத் தயாராக இருக்கிறோம். எங்கள் பக்கம் அரசு இருப்பதால், போலீஸும் எங்கள் பக்கம்தான் உள்ளது’ என்று பகிரங்கமாக பசுவதை தாக்குதல் சம்பவங்கள் குறித்து பெருமையாக பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Advertisement