This Article is From Nov 13, 2018

குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை

குஜராத்தில் குல்பர்க் சொசைட்டி நகரில் நடந்த தீ வைப்பு சம்பவத்தில் எம்.பி. இஹ்சான் ஜாஃப்ரி உள்பட 69 பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஜாஃப்ரியின் மனைவி வழக்கு தொடர்ந்துள்ளார்.

குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை

மோடி குற்றமற்றவர் என்று சிறப்பு விசாரணைக்குழு அளித்த அறிக்கையை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருந்தது.

New Delhi:

குஜராத் கலவரம் தொடர்பாக கொல்லப்பட்ட எம்.பி. இஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி ஸாகியா ஜாஃப்ரி, பிரதமர் மோடிக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கு உச்ச நீதிமன்றத்தில் திங்களன்று விசாரணைக்கு வருகிறது.

2002-ல் குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது கலவரம் ஏற்பட்டது. இதில் மோடி குற்றமற்றவர் என்று சிறப்பு விசாரணைக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இதனை குஜராத் நீதிமன்றம் உறுதி செய்ததால், வழக்கில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

zakia jafri

2012-ல் உச்ச நீதிமன்றம் மேற்பார்வை செய்த சிறப்பு விசாரணைக்குழு தனது அறிக்கையில், கலவரத்தை தடுத்து நிறுத்துவது தொடர்பாக முதல்வராக இருந்த மோடி அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார் என தெரிவிக்கப்பட்டது. 2002-ல் சபர்மதி ரயில் தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் 59 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரம் வெடித்தது. இதில் அகமதாபாத் குல்பர்கா சொசைட்டி பகுதியில் நடந்த கலவரத்தின்போது முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இஹ்சான் ஜாஃப்ரி படுகொலை செய்யப்பட்டார்.

இதில் கலவரத்தை தடுக்க மோடி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி, ஜாஃப்ரியின் மனைவி ஸாகியா ஜாஃப்ரி வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனு திங்களன்று விசாரணைக்கு வருகிறது.

.