This Article is From Aug 26, 2019

ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் திங்கள்கிழமை வரை அவரை சிபிஐ காவலில் விசாரிக்க உத்தரவிட்டதற்கு எதிராகவும், அவருக்கு பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட்டிற்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் பி.சிதம்பரம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் திங்கள்கிழமை வரை அவரை சிபிஐ காவலில் விசாரிக்க உத்தரவிட்டிருந்தது.

New Delhi:

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் வழங்க மறுத்த டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ப.சிதம்பரம் தொடர்ந்த வழக்கின் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது. 

முன்னதாக, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கொடுக்கக் கோரி ப.சிதம்பரம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. இதைத்தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.பானுமதி மற்றும் ஏ.எஸ்.போபண்ணா அமர்வுக்கு முன்னர் கடந்த சனிக்கிழமையன்று இந்தமனு விசாரணைக்கு வந்தது. அதில், அவருக்கு எதிராக மத்திய அரசு, வலுவான வாதங்களை முன் வைத்து, ஜாமீன் கொடுக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது. 

குறிப்பாக மத்திய அரசு தரப்பு, ‘ஐ.என்.எக்ஸ் வழக்கில் மிகப்பெரும் பணமோசடி நடைபெற்றுள்ளதை நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்' என்று கூறியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ அமைப்புகளின் சார்பில் ஆஜரான அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா.  “இந்த வழக்கைப் பொறுத்தவரை, ஷெல் நிறுவனங்கள் மூலம் பல கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. அதற்கு ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டியது அவசியமாகும் என்று வாதாடினார். 

ஆனால், அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும் வரும் திங்கட்கிழமை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில் இன்று காவல் முடிந்து மீண்டும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படவுள்ளார். அத்துடன் அவர் தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட்டை எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் தன்னை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அளிக்கப்பட்ட அனுமதியை எதிர்த்தும் சிதம்பரம் புதிய மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த இரண்டு மனுக்களும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பாக அமலாக்கத்துறையின் வழக்கில் முன் ஜாமீன் கோரி சிதம்பரம் தொடர்ந்த வழக்கும் இன்று விசாரிக்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் மூன்று வழக்குகளையும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தது.

.