This Article is From Aug 07, 2018

பசுவதை தாக்குதல் குறித்து வீடியோ ஆதாரம் வெளியிட்ட என்டிடிவி… சூடுபிடிக்கும் வழக்கு!

பசுவதை செய்தார்கள் என்று குற்றம் சாட்டி இந்திய அளவில் பலரை ‘பசுக் காவலர்கள்’ தொடர்ந்து தாக்கி வரும் சம்பவங்கள் நடந்து வருகின்றன

ஹைலைட்ஸ்

  • Lawyers for Hapur lynching victim requested an "urgent hearing"
  • Chief Justice of India Dipak Mishra agreed to hear case on Monday next
  • Victim asked for court-monitored Special Investigation Team probe
New Delhi:

பசுவதை செய்தார்கள் என்று குற்றம் சாட்டி இந்திய அளவில் பலரை ‘பசுக் காவலர்கள்’ தொடர்ந்து தாக்கி வரும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. தாக்குதலுக்கு உள்ளான நபர்கள் பரிதாபமாக இறந்ததும் பல சமயங்களில் நடந்துள்ளன. இந்நிலையில், என்டிடிவி-யைச் சேர்ந்த நிருபர்கள் குழு பசுவதை தாக்குதலில் சம்பந்தப்பட்ட பலரை, அவர்களுக்குத் தெரியாமல் வீடியோ எடுத்தது. வீடியோவில் அவர்கள், கொலை செய்தது குறித்து பகிரங்கமாகவும் அப்பட்டமாகவும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதையடுத்து உத்தர பிரதேச ஹப்பூர் மாநிலத்தில் பசுவதை செய்தார் என்று ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாகவும், இன்னொரு முதியவர் தாக்கப்பட்டது தொடர்பாகவும், போடப்பட்ட வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் என்டிடிவி, குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள் குறித்து வெளியிட்ட வீடியோ ஆதாரத்தை வைத்து வழக்கு விரைந்து விசாரிக்குமாறு பாதிக்கப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். 

lqf2tp6g

உத்தர பிரதேச மாவட்டம், ஹப்பூருக்கு நமது குழு சென்றது. அங்கு ஜூன் 18 ஆம் தேதி, காசிம் குரேஷி என்கிற நபர் பசுவதை செய்தார் என்று குற்றம் சாட்டி கொலை செய்யப்பட்டார். அதேபோல 65 வயதான சமயுதீன் கும்பலால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார். 

இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீஸ் 9 பேரை கைது செய்தது. 9 பேரில் 4 பேர் தற்போது பிணையில் இருக்கின்றனர். அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராகேஷ் சிசோடியாவை நாங்கள் சந்தித்தோம். 

சிசோடியா நீதிமன்றத்தில் தனக்கும் நடந்த சம்பவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார். ஆனால், கேமராவிலோ வேறு கதை. 

அவர், ‘நான் சிறை அதிகாரிகளிடம், அவர்கள் பசுவைக் கொன்றார்கள். நாங்கள் அவர்களைக் கொன்றோம் என்றேன். நான் சிறையிலிருந்து விடுபற்ற போது, என்னை அழைத்துச் செல்ல 3, 4 கார்கள் வந்தன. என் பெயரை சொல்லி வெளியில் இருந்தவர்கள் கோஷம் எழுப்பினர். என்னை அவர்கள் அப்படி வரவேற்றனர். எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. எனது படை தயாராக இருக்கிறது. யாராவது பசுவைக் கொன்றால் அவர்களை நாங்கள் கொல்ல தயாராக இருக்கிறோம். எங்கள் பக்கம் அரசு இருப்பதால், போலீஸும் எங்கள் பக்கம்தான் உள்ளது’ என்று பகிரங்கமாக பசுவதை தாக்குதல் சம்பவங்கள் குறித்து பெருமையாக பேசியுள்ளார்.

இதை வைத்து உச்ச நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட நபர்களின் வழக்கறிஞர், விரைந்து வழக்கை விசாரிக்குமாறு மனு செய்தார். இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, வரும் திங்கள் கிழமை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறியுள்ளார். 

.