பாலிவுட் இயக்குநர் அனுபவ் சின்ஹா இயக்கி ஆயுஷ்மான் குரானா நடித்த ‘ஆர்டிகிள் 15’ திரைப்படம்
New Delhi: இந்தி படமான ஆர்ட்டிகிள் 15 படத்தின் தணிக்கைச் சான்றிதழை ரத்து செய்யக்கோரும் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. மேலும், உரிய அதிகாரிகளை சந்தித்து தங்களின் குறைகளை தெரிவிக்குமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தியுள்ளது.
பாலிவுட் இயக்குநர் அனுபவ் சின்ஹா இயக்கி ஆயுஷ்மான் குரானா நடித்த ‘ஆர்டிகிள் 15' திரைப்படம், கடந்த ஜூன் 28-ம் தேதி வெளியானது. சமுதாயத்தின் வதந்தி பரப்பும் விதமாகவும், சமூகத்தில் சாதி வெறுப்பை ஏற்படுத்தும் விதமாகவும் சர்ச்சைக்குரிய வசனங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளதால் இந்தியாவின் பிரம்மன் சமாஜ் என்ற மனுதாரர், திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழை ரத்துசெய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.
இம்மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே மற்றும் பி.ஆர் கவாய் அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மறுப்பு தெரிவித்தது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)