அதிருப்தி எம்எல்ஏ-க்களால் கடந்த ஜூலை 23 ஆம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு. (File)
ஹைலைட்ஸ்
- தகுதி செய்யப்பட்டதில் 14 காங். எம்எல்ஏ-க்கள் அடங்குவர்
- 3 மஜத எம்எல்ஏ-க்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்
- முதல்வர் எடியூரப்பா, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ-க்களுக்கு ஆதரவு
New Delhi/Bengaluru: கர்நாடகாவில் (Karnataka) ஆட்சி புரிந்து வந்த காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியைச் (Congress - JDS) சேர்ந்த 17 எம்எல்ஏ-க்கள், அதிருப்தி தெரிவித்ததால், கூட்டணி அரசு கவிழ்ந்தது. அவர்களுக்கு எதிராக சபாநாயகர் நடவடிக்கை எடுத்து, 17 பேரையும் தகுதி நீக்கம் (Disqualified) செய்தார். சபாநாயகரின் இந்நடவடிக்கை எதிர்த்து எம்எல்ஏ-க்கள் உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court) வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் இன்று நீதிமன்றம், தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது.
10 Points:
1.கடந்த ஜூலை மாதம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 14 எம்எல்ஏ-க்கள் மற்றும் மஜத-வைச் சேர்ந்த 3 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்தார் கர்நாடக சட்டமன்ற சபாநாயகர்.
2.தகுதி நீக்கம் செய்தபோது, வரும் 2023 ஆம் ஆண்டு வரை தேர்தலில் நிற்பதற்கும் எம்எல்ஏ-க்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
3.தகுதி நீக்கம் செல்லும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ள போதும், தேர்தலில் போட்டியிட தடை இல்லை என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
4.எம்எல்ஏ-க்கள் தரப்பில், ‘ராஜினாமா செய்த பின்னர் தகுதி நீக்கம் செய்ய உரிமை இருக்கிறதா?', என்று மனுவில் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.
5.அதிருப்தி எம்எல்ஏ-க்களால் கடந்த ஜூலை 23 ஆம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு.
6.அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தரப்பு, தகுதி நீக்க உத்தரவு ரத்து செய்யப்பட வேண்டும் என்று மனு தாக்கல் செய்த நிலையில், காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள், தகுதி நீக்கத்தை ரத்து செய்யக் கூடாது என்று தனியாக முறையிட்டனர்.
7.எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியான 15 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் டிசம்பர் 5 ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்க இருக்கிறது.
8.கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 சட்டமன்ற உறுப்பினர்களில் 106 பேரின் ஆதரவு பாஜக-வுக்கு உள்ளது. காங்கிரஸ் - மஜதவுக்கு 101 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது.
9.ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள பாஜக இடைத் தேர்தலில், குறைந்தபட்சம் 6 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும்.
10.கர்நாடக முதல்வராக உள்ள பி.எஸ்.எடியூரப்பா, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ-க்களுக்கு ஆதரவாக இருக்கிறார்.