Sabarimala Verdict: சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அனுமதியில்லை
New Delhi: கேரளாவின் சபரிமலை கோயிலில் அனைத்து வயதுடைய பெண்களும் நுழைய அனுமதிக்கும் தீர்ப்பினை மறுபரிசீலனை செய்யக் கோரும் மனுக்கள் மீதான தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கவுள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் கோயிலுக்குள் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த் தீர்ப்பு பெரும் சர்ச்சைகளை உருவாக்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து 65 மனுகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அனுமதியில்லை.
இந்த மனுவினை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகயின் பதவிக்காலம் வரும் 17-ம் தேதியோடு முடிகிறது.
15-ம் தேதிக்குள் முக்கிய வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சபரிமலை தீர்ப்பு சீராய்வு மனு காலை 10.30 மணியளவில் வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற 5 நீதிபதிகள் பேர் கொண்ட அமர்வு சபரிமலைக் கோயிலுக்குள் நுழையலாம் என்ற தீர்ப்பினை ஐவரில் 4 பேர் பெரும்பான்மை தீர்ப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டது. இந்து மல்ஹோத்ரா மட்டும் வேறுபட்ட தீர்ப்பினை வழங்கினார்.
மேலும் உச்ச நீதிமன்றம் பழமையான மத நடைமுறை சட்ட விரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் தெரிவித்தது.