வழக்கு மார்ச் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
New Delhi: உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷணுக்கு நீதிமன்றம், அவமதிப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளது. சிபிஐ அமைப்பின் இடைக்கால இயக்குநராக செயல்பட்டு வரும் நாகேஷ்வர் ராவுக்கு எதிராக பூஷண் கூறிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவமதிப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் மற்றும் மத்திய அரசு, பூஷணுக்கு எதிராக அவமதிப்பு மனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நோட்டீஸ் கொடுக்கும்போது பூஷண் நீதிமன்ற வளாகத்தில்தான் இருந்தார். அவர் அதை ஏற்றுக் கொண்டு, 3 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்வதாக உறுதியளித்தார். இதையடுத்து வழக்கு மார்ச் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.