This Article is From May 14, 2019

‘அந்த 10 கோடி ரூபாயை தர முடியாது’- கார்த்தி சிதம்பரத்துக்கு குட்டுவைத்த நீதிமன்றம்!

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு, சட்டத்துக்குப் புறம்பாக 300 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு பெற்றுத் தந்ததாக கார்த்தி சிதம்பரத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

‘அந்த 10 கோடி ரூபாயை தர முடியாது’- கார்த்தி சிதம்பரத்துக்கு குட்டுவைத்த நீதிமன்றம்!

கடந்த வாரம் கார்த்தி, மீண்டும் வெளிநாடுககளுக்குச் செல்ல அனுமதியளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிக்கியிருக்கும் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், உச்ச நீதிமன்றத்தில் டெபாசிட்டாக வைத்த 10 கோடி ரூபாயை கேட்டு முறையிட்டிருந்தார். அவரது கோரிக்கை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு, சட்டத்துக்குப் புறம்பாக 300 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு பெற்றுத் தந்ததாக கார்த்தி சிதம்பரத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் நடந்த போது, ஐ.என்.எக்ஸ் மீடியாவின் இயக்குநர்களாக இருந்தவர்கள் பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜி. 300 கோடி ரூபாய் பணத்தைப் பெற்றுத் தர அப்போது, மத்திய அரசில் அமைச்சராக அங்கம் வகித்த தனது தந்தையான ப.சிதம்ரத்தின் செல்வாக்கை கார்த்தி, தவறுதலாக பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட சூழலில் கடந்த ஜனவரி மாதம் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தார் கார்த்தி. இதையடுத்து ஜனவரி 30 ஆம் தேதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, “10 கோடி ரூபாய் டெபாசிட் செய்துவிட்ட வெளிநாட்டுக்கு சென்று வரலாம்” என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கார்த்தியும், டெபாசிட் தொகையை கட்டினார். 

கடந்த வாரம் கார்த்தி, மீண்டும் வெளிநாடுககளுக்குச் செல்ல அனுமதியளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். இதற்கு சம்மதம் தெரிவித்த நீதிமன்றம், “10 கோடி ரூபாய் டெபாசிட் செய்துவிட்ட செல்லலாம்” என்று உத்தரவிட்டது. 

இதற்குதான் கார்த்தி சிதம்பரம் தரப்பில், “முன்னதாக 10 கோடி ரூபாய் டெபாசிட் தொகையை நான் நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளேன். அதை திரும்ப செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் முன்னர் செலுத்திய டெபாசிட் தொகைக்கு வட்டி கட்டி வருகிறேன்” என்று நீதிமன்றத்தில் குறிப்பாட்டார். இதை ஏற்க மறுத்துவிட்டது உச்ச நீதிமன்றம்.
 


 

.