Read in English
This Article is From Jun 07, 2019

கட்டியை நீக்க மண்டையைத் திறந்தால் உள்ளே புழு… என்ன நடந்தது..?

மருத்துவர்கள் குழு இது மிகவும் அரிதான ஒன்றுதான்  அனைவருக்கும் நிகழும் என்று சொல்ல முடியாது என்று கூறியுள்ளனர். அறுவை சிகிச்சைக்குப் பின் பால்மா நலமாக உள்ளார்

Advertisement
உலகம் (c) 2019 The Washington PostEdited by

பால்மா தூக்கமின்மையும், கற்பனையான தோற்றங்களும் தோன்றி மறைவதாக தெரிவித்து வந்தார்.

நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் பெண்ணொருவருக்கு மூளையில் கட்டி உள்ளதாக யூகித்து அறுவை சிகிச்சை செய்துள்ளனர். 

மண்டை ஓட்டினை திறந்து செய்யப்படும் ஆபத்தான் அறுவை சிகிச்சையின் போது தான் அது கட்டியில்லை என்றும் மூளையில் நாடாப் புழு வளர்ந்துள்ளதையும் கண்டறிந்துள்ளனர். 

அமெரிக்காவைச் சேர்ந்த பால்மா என்றொரு பெண்ணுக்கு 2018 ஆம் ஆண்டு முதல் தூக்கமின்மையும், கற்பனையான தோற்றங்களும் தோன்றி மறைவதாக தெரிவித்து வந்தார். காபி கோப்பையைக் கூட கைகளால் உறுதியாக பிடிக்க முடியவில்லை. யாருக்கும் மெசேஜ் செய்யக்கூட முடியாமல் சிரமப்பட்டுள்ளார்.

பலவிதமான குழப்பங்களையும் அனுபவித்து வந்துள்ளார். வீட்டினை பூட்டாமல் மறந்து திறந்தபடியே விட்டு செல்வது, வேலையிலும் பல குழப்பங்கள் என்று இருந்து வந்துள்ளார். பால்மாவின் நிலையை உணர்ந்த பெற்றோர்கள் மருத்துவர்களிடம் பரிசோதனைக்கு அழைத்து வந்துள்ளனர். பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள் இதனை கேன்சர் என்றே கூறியுள்ளனர். மூளையில் உள்ள கட்டியை அகற்றவே அறுவை சிகிச்சையும் செய்துள்ளனர். இறுதியில் மூளையில் நாடாபுழு இருந்ததைக் கண்டு மருத்துவக் குழு அதிர்ச்சியடைந்துள்ளனர். 

Advertisement

மருத்துவர்கள் குழு இது மிகவும் அரிதான ஒன்றுதான்  அனைவருக்கும் நிகழும் என்று சொல்ல முடியாது என்று கூறியுள்ளனர். அறுவை சிகிச்சைக்குப் பின் பால்மா நலமாக உள்ளார்

Advertisement