Air Strike: சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை போன்று நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் 100 சதவிகிதம் வெற்றிகரமாக முடிந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
New Delhi: Air Strike: புல்வாமா தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தியுள்ளது.
விதிமுறைகளை இந்திய விமானப்படை மீறியுள்ளதாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இன்று காலை முதல் புலம்பத் தொடங்கியுள்ளனர். இதன் மூலம் அதிரடி சம்பவத்தை இந்திய ராணுவம் செய்திருப்பது உறுதியாகியுள்ளது.
இன்று அதிகாலை 3.30 மணிக்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 12 மிராஜ் 2000 என்ற ஜெட் போர் விமானம் 1,000 கிலோ எடை கொண்டு வெடிகுண்டுகளை தீவிரவாத முகாம்கள் மீது வீசியுள்ளது.
சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை போன்று நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் 100 சதவிகிதம் வெற்றிகரமாக முடிந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 14 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. அந்த அமைப்பு முகாம்கள் மீதும், லஷ்கர்-இ-தய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்புகள் முகாம்கள் மீதும் இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்து மத்திய விவசாயத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் ட்விட்டர் மூலம் கூறுகையில், ‘இன்று எல்லைத் தாண்டி இந்திய விமானப் படை வான் வழி தாக்குதல் நடத்தியதில், தீவிரவாத முகாம்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டன' என்றுள்ளார்.
தீவிரவாத முகாம் மீது அதிரடி தாக்குதலை அடுத்து லைவ் அப்டேட்ஸ்:
எங்களின் சண்டை பாகிஸ்தானுடன் அல்ல, தீவிரவாதத்துடன்: சுஷ்மா சுவராஜ்
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பேசுகையில், 'நான் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மற்றும் பல நாட்டுத் தூதர்களுடன் தாக்குதல் விஷயம் குறித்து பேசியுள்ளேன். எங்களின் சண்டை பாகிஸ்தானுடன் கிடையாது. தீவிரவாதத்துடன் மட்டும்தான்' என்றுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் எவ்வித அதிரடியிலும் ஈடுபடக் கூடாது: ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தல்
இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாத முகாமில் அதிரடி தாக்குதலை இந்தியா நடத்தியது. இதையடுத்து ஐரோப்பிய யூனியன், 'இந்திய மற்றும் பாகிஸ்தான் தரப்புகள் எந்தவித அதிரடி நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இருக்க வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளது என்று ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
பாலகோட்பகுதியில்செயல்பட்டுவந்தஜெய்ஷ்அமைப்பின்முகாம். கீழேயுள்ளபடங்களில்முகாமின்ஜிம், ஓய்வறை, பயிற்சிசெய்யும்இடம், நீச்சல்குளம்உள்ளிட்டவையைப்பார்க்கலாம். இந்தஇடங்களைத்தான்இந்தியவிமானப்படைஇன்றுகுண்டுபோட்டுஅழித்ததாககூறப்படுகிறது.
வாகா எல்லையில் உச்சகட்ட பாதுகாப்புஎல்லையைத் தாண்டி ஜெய்ஷ் அமைப்பின் தீவிரவாத முகாம்களை இந்தியா தாக்கிய பிறகு, வாகா எல்லையில் பாதுகாப்பு முடுக்கிவிட்டுள்ளது. அம்பாலா விமானத் தளமும் உஷார் நிலையில் உள்ளது.
பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆஸ்திரேலியா வலியுறுத்தல்இது குறித்து ஆஸ்திரேலிய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
பாகிஸ்தான், அதன் எல்லைக்கு உட்பட்ட இடத்தில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தய்பா போன்ற அமைப்புகளை பாகிஸ்தான் ஒடுக்க வேண்டும்.
தங்கள் நாட்டில் எந்த வித கட்டுப்பாடுமின்றி இயங்கி வரும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற அமைப்புகள் இனி மேலும் செயல்படாவிடாமல் பாகிஸ்தான் அரசு தடுத்திட வேண்டும்.
இப்படி தீவிரவாதத்துக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளால் பதற்றமான சூழல் தணியும்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு தரப்புகளும் எந்தவித அதிரடி நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது. இருவருக்கும் இருக்கும் பிரச்னையை சுமூகமான பேச்சுவார்த்தை மூலம் தீரக்க வேண்டும்.
‘ஒரு அரண் போலவே செயல்பட்டிருக்கிறார்கள்’
'எந்தவொரு சுயமரியாதை மிக்க நாடும் என்ன செய்யுமோ, அதைத்தான் நாமும் செய்துள்ளோம். நமது ராணுவம் நமக்குப் பெருமை சேர்த்துள்ளது. அவர்கள்தான் நமது அரண். ஒரு அரண் போலவே செயல்பட்டிருக்கிறார்கள். நமது வீரர்களுக்குத் தலை வணங்குகிறேன்' என்று நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் கருத்து கூறியுள்ளார்.
'எந்த வித சூழ்நிலைக்கும் தயாராக இருங்கள்!', என்று இந்திய தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாட்டு மக்களுக்கும் ராணுவத்திற்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் அமைதியான சூழலை கொண்டு வர முயல வேண்டும் என்று சீனா கருத்து, ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தகவல்
ராஜஸ்தானில்பேசியுள்ளபிரதமர்மோடி, 'நமதுராணுவவீரர்களுக்குஅனைவரும்தலைவணங்கவேண்டும். நமதுநாடுமிகவும்பாதுகாப்பானகரங்களில்உள்ளது' என்றுள்ளார்.
பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதி இன்று நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து, 'தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படையின் தாக்குதல் பாராட்டுக்குரியது. அவர்களுக்கு எனது சல்யூட். புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து ராணுவத்துக்கு சுதந்திரம் கொடுத்துள்ளார் பிரதமர் மோடி. இந்த சுதந்திரத்தைப் புல்வாமா, பதன்கோட், உரி ஆகிய சம்பவங்களுக்கு முன்னர் கொடுத்திருந்தால், தேவையில்லாமல் நமது ராணுவ வீரர்களின் உயிர் போயிருக்காது' என்று விமர்சனம் செய்துள்ளார்.
தாக்குதல் நடத்தியிருப்பது குறித்து பாஜக தலைவர் அமித்ஷா ட்விட்டர் மூலம், 'நமது ராணுவத்தின் சேவைக்கும் வீரத்துக்கும் நான் தலை வணங்குகிறேன். இன்றைய நடவடிக்கை பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கீழ் இந்திய தேசம் பாதுகாப்பாகவும் பலத்துடனும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிய இந்தியாவின் வெளிப்பாடே இந்த உறுதியான நடவடிக்கையாகும். இந்த புதிய இந்தியாவில் தீவிரவாதிகளோ அல்லது தீவிரவாதிகளுக்குத் துணை போகிறவர்களோ தப்பித்துவிட முடியாது' என்று பதிவிட்டுள்ளார்.
2016 ஆம் ஆண்டு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்தபோது, வடக்கு ராணுவ கமாண்டராக இருந்த ஓய்வு பெற்ற லெப்டனென்ட் ஜெனரல் ஹூடா, 'பாலகோட் பகுதியில் இப்படிப்பட்ட தாக்குதலை நடத்தியதற்கு மத்திய அரசுக்கும், விமானப்படைக்கும் எனது பாராட்டுகள். மிகவும் கச்சிதமாக இந்த ஆபரேஷன் நடந்துள்ளது. இந்த ஆபரேஷனில் ஈடுபட்ட அனைத்து விமானிகளும் பாதுகாப்பாக உள்ளனர். இந்தத் தாக்குதல் என்பது அவசியத் தேவை என்றே கருதுகிறேன். புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இப்படிப்பட்ட உறுதியான பதிலடி கொடுக்கப்படும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை' என்று கருத்து கூறியுள்ளார்.
தாக்குதல் குறித்து மத்திய அரசு வட்டாரம், 'பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்கதலில் சுமார் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம்' என்று தகவல் தெரிவிக்கிறது.
இந்திய விமானப்படையின் அதிரடி தாக்குதல் குறித்து நமக்கு இதுவரை கிடைத்த தகவல்:
இந்திய விமானப்படையைச் சேர்ந்த 12 மிராஜ் 2000 ரக போர் விமானங்கள், நாட்டின் எல்லையைத் தாண்டி லேசர் வசதி கொண்ட 1,000 கிலோ வெடிகுண்டுகளை இலக்குகள் மீது போட்டுள்ளன.
முதல் வெடிகுண்டு இன்று அதிகாலை 3:45 மணிக்கும், அடுத்த தாக்குதல் 3:48 மணிக்கும் அதற்கடுத்த தாக்குதல் 3:58 மணிக்கும் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த தாக்குதல் ஆபரேஷனும் 19 நிமிடங்களுக்குள் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதல், பாலகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் மிகப் பெரிய முகாம் மீது நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த முகாமை அந்த அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் மைத்துனர் யூசஃப் அசார் நடத்தி வந்துள்ளார்.
இந்தத் தாக்குதல் மூலம் தீவிரவாதிகள் மட்டும் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பொது மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்துள்ளதாக இந்தியத் தரப்பு கூறியுள்ளது.
பிடிஐ செய்தி நிறுவனத்தின் தகவல்படி பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, 'பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. இது எல்லைக் கட்டுப்பாட்டை மீறும் செயலாகும். தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பாகிஸ்தான் தக்க பதிலடி தர உரிமையுள்ளது' என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இன்றைய அதிரடி தாக்குதல் குறித்து, உலக நாடுகளுக்கு விளக்கம் கொடுக்க உள்ளது இந்தியா.
இந்திய விமானப்படையை விமானிகளை நினைத்தும், அவர்களின் மகத்தான சேவை குறித்தும் பெருமையாக இருக்கிறது- ஸ்டாலின் ட்விட்டரில் பாராட்டு
பாலகோட் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதை அடுத்து, என்.எஸ்.ஏ-வின் அஜித் தோவல், இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் மற்றும் இந்திய விமானப்படை தளபதி பி.எஸ்.தனாவ் ஆகியோர் எல்லையில் பாதுகாப்பு குறித்து சோதனை செய்து வருகின்றனர்.
தீவிரவாத அமைப்புகள் மீது எல்லைத் தாண்டி இந்தியா நடத்திய அதிரடி தாக்குதல் குறித்து எதிர்கட்சிகளுக்கு விளக்கம் அளிக்க, இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ். இந்த சந்திப்பு, வெளியுறவுத் துறை அமைச்சக அலுவலகமான ஜவஹர் பவனில் நடக்கும்.
தீவிரவாத அமைப்புகள் மீது எல்லைத் தாண்டி இந்தியா நடத்திய அதிரடி தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோருக்கு விளக்கம் அளித்து வருகிறார்.
இந்திய விமானப்படையின் அதிரடி தாக்குதல் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், 'இந்தியா, அதன் ஹீரோக்களை கண்டு பெருமையடைகிறது. அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்' என்று ட்விட்டர் மூலம் கூறியுள்ளார்.
இந்திய விமானப்படையின் அதிரடி தாக்குதல் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 'இந்திய விமானப்படை என்பதை இந்திய அமேசிங் ஃபைட்டரஸ் என்றும் சொல்லலாம்' என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
தீவிரவாதத்தை முழுவதுமாக அழிக்க இந்தியா உறுதியாக செயல்படும். இந்த அதிரடி தாக்குதலானது ஜெய்ஷ் அமைப்பை குறிவைத்துத்தான் செய்யப்பட்டது. பொது மக்கள் இறந்துவிடக் கூடாது என்பதை கணக்கில் கொண்டுதான் இந்தத் தாக்குதலை நடத்தினோம்: வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலே
இன்று அதிகாலை இந்திய தரப்பால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஜெய்ஷ் அமைப்பின் முகாம்கள், கமாண்டோஸ், பயிற்சியாளர்கள், ஜிஹாதிக்கள் என பெரும்பாலானோர் கொல்லப்பட்டனர்: வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலே
பாலகோட்டில் ஜெய்ஷ் அமைப்பின் மிகப் பெரிய முகாமை இந்திய தரப்பு அழித்துள்ளது: வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலே
ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு, மேலும் பல தற்கொலைப் படைத் தாக்குதலை நாட்டின் பல்வேறு இடங்களில் நடத்து உள்ளதாக எங்களுக்கு நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல்கள் வந்தன. இந்த காரியத்துக்காக பலருக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்பட்டது: வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலே
இந்திய வெளியறவுத் துறை அமைச்சகம் செய்தியாளர்களை சந்தித்து, இந்தத் தாக்குதல் குறித்து விளக்கம் அளித்து வருகிறது