Read in English
This Article is From Mar 30, 2019

‘ஐ.மு.கூ ஆட்சியில் 11 முறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்திருக்கு’- சந்திரசேகர் ராவ் பகீர்

சந்திரசேகர் ராவ், நலகோண்டா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதுதான் இப்படிப் பேசினார்.

Advertisement
Telangana Edited by

‘நான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அமைச்சராக இருந்தபோது, 11 முறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்திருக்கிறது’ என்று புதிய தகவலை கூறி அதிர்ச்சி கிளப்பியுள்ளார் கேசிஆர்.

Hyderabad:

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து அதிகம் பேசப்பட்டு வருவதைத் தொடர்ந்து, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ‘நான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அமைச்சராக இருந்தபோது, 11 முறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்திருக்கிறது' என்று புதிய தகவலை கூறி அதிர்ச்சி கிளப்பியுள்ளார். 

அவர் மேலும் பேசுகையில், ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்ற நடவடிக்கைகள் அடிக்கடி நடக்கும். அது குறித்தெல்லாம் வெளியே சொல்லிக் கொண்டிருக்க முடியாது. சாய்வாலா என்று சொல்லிக் கொண்டிருந்த பிரதமர் மோடி, இப்போது சவுகிதார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். நாடு புதிய திசையில், வளர்ச்சி நோக்கிப் போக வேண்டும். அதற்கு தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் உதவ மாட்டார்கள். மோடி, தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார்' என்று சரமாரியாக தாக்கினார். 

சந்திரசேகர் ராவ், நலகோண்டா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதுதான் இப்படிப் பேசினார். தெலங்கானாவில் பிரதமர் மோடி பிரசாரம் செய்த சில மணி நேரங்களில் ராவ், இப்படி விமர்சித்துப் பேசியுள்ளார். 

Advertisement

முன்னதாக பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘பிரதான் மந்திரி மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தெலங்கானாவில் அமல் செய்ய மறுத்து வருகிறார் சந்திரசேகர் ராவ். இதன் மூலம் அவர், ஏழைகளுக்குத் துரோகம் செய்கிறார்' என்று உரையாற்றினார். 

Advertisement