This Article is From Oct 29, 2019

சுர்ஜித் உடல் வெப்பநிலையை ரோபோ பதிவு செய்துள்ளது - விஜய பாஸ்கர் விளக்கம்

ரோபோ கேமிராவை உள்ளே செலுத்தி குழந்தையின் கையிலுள்ள வெப்ப அளவை பதிவு செய்துள்ளோம். கையில் வெப்பநிலை இருப்பதால் குழந்தை மயக்கத்தில் இருக்கலாம்.

சுர்ஜித் உடல் வெப்பநிலையை ரோபோ பதிவு செய்துள்ளது - விஜய பாஸ்கர் விளக்கம்

மீட்பு பணிகள் குறித்து முதல்வர் கேட்டறிந்து வருகிறார்

சுர்ஜித் மீட்பு பணிகள் எந்தளவுக்கு நடைபெற்று வருகிறது என்பது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள சிறுவன் சுர்ஜித்தை மீட்க ரிக் இயந்திரம் மூலம் துளையிடும் பணி தொடங்கியது.
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி மூன்றாவது நாளாக தொடர்கிறது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி மூன்றாவது நாளாக தொடர்கிறது. குழந்தையை மீட்க 2 நாட்களாக மீட்புப் பணியினர் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் பயனளிக்காததால் அதிநவீன இயந்தரங்களை கொண்டு வந்து குழந்தையை மீட்க என்எல்சி, ஓஎன்ஜிசி மீட்புக் குழு திட்டமிட்டது.

இதையடுயத்து 32 மணிநேரம் கழித்து தற்போது என்எல்சி, ஓஎன்ஜிசி மீட்புக் குழுவினர் 20 பேர் இணைந்து திருச்சி எல்&டி இடமிருந்து ரிக் என்ற அதி நவீன இயந்திரங்களை கொண்டு வந்து குழந்தையை மீட்பதற்காக ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் நேரடியாக இருந்து பணிகளை கவனித்து வருகிறார். செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

சுர்ஜித்தை மீட்க 70 பேர் கொண்ட தேசிய பேரிடர் குழு பணியில் ஈடுபட்டு வருகிறது. நிலத்தில் அதிர்வுகள் ஏற்படுவதை தடுக்க மிகுந்த கவனத்துடன் குழியை தோண்டி வருகிறோம். இதுவரை 6.3 மீட்டர் தோண்டப்பட்டுள்ளது. அதாவது ஏறக்குறைய 20 அடி தோண்டியுள்ளனர். தொடர்ந்து ஆக்ஸிஜன் செலுத்தி வருகிறோம். நேற்று முதல் குழந்தையின் கையில் அசைவு எதுவும் இல்லை.

ரோபோ கேமிராவை உள்ளே செலுத்தி குழந்தையின் கையிலுள்ள வெப்ப அளவை பதிவு செய்துள்ளோம். கையில் வெப்பநிலை இருப்பதால் குழந்தை மயக்கத்தில் இருக்கலாம். மீட்பு பணிகள் எந்தளவுக்கு வேகமாக நடைபெற்று வருகின்றன என்பதை முதல்வர் கேட்டறிந்து வருகிறார். என்று அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

.