This Article is From Jul 26, 2019

சூர்யாவின் கருத்து ஒட்டுமொத்த தமிழர்களின் கருத்தே: சீமான்

கல்வியை சந்தை பொருளாக்கி விட்டார்கள். முதலாளிகளின் விற்பனை பண்டமாக மாற்றிய பின்பு இந்த கல்வி கொள்கை யாருக்கு பயன்படும். முதலாளிகள் லாபம் ஈட்ட உதவுமே ஒழிய, மாணவர்களுக்கு அறிவை வளர்க்க பயன்படாது.

சூர்யாவின் கருத்து ஒட்டுமொத்த தமிழர்களின் கருத்தே: சீமான்

திராவிட கட்சிகளோடு எப்போதும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க மாட்டோம்: சீமான்

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்தை ஒட்டுமொத்த தமிழர்களின் கருத்தாக தான் பார்க்கிறேன் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து செய்தியாகளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, நாம் தமிழர் கட்சியின் தத்துவமே ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக தான் ஆரம்பிக்கப்பட்டது. கட்சிகளோடு கூட்டணி வைத்தால் அந்த மாற்றத்தை கொண்டு வர முடியாது. 

அதனால் இந்திய கட்சிகள், திராவிட கட்சிகளோடு எப்போதும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க மாட்டோம். தனித்து தான் போட்டியிடுவோம். 

புதிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா கருத்து சரியான கருத்து. அதனை நான் ஒட்டுமொத்த தமிழர்களின் கருத்தாக பார்க்கிறேன். கல்வி மாநில அரசின் உரிமை. ஆனால் கல்வியை மத்திய பட்டியலுக்கு கொண்டு சென்ற பின் அனைத்து அதிகாரத்தையும் மத்திய அரசே எடுத்துக் கொண்டது. 

இந்தி, சமஸ்கிருதம் படிக்க சொல்கிறார்கள். இந்திய மொழிகளின் தொன்மையை தமிழ் மொழியில் இருந்து அறியலாம் என்று நாட்டின் பிரதமரே கூறுகிறார். பழமையான மொழி, தொன்மையான மொழிதான் இந்திய ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று சொன்னால் தமிழை தான் ஆட்சி மொழியாக வைக்க வேண்டும். 

ஆனால் 500 ஆண்டுகளுக்குள்ளாக வந்த இந்தியை அனைவரும் படிக்க வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம். ஒரு இனத்தை மொழியில் இருந்தும், வரலாற்றில் இருந்தும் நீக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்படுவதை எப்படி ஏற்றுக் கொள்வது. 

கல்வியை சந்தை பொருளாக்கி விட்டார்கள். முதலாளிகளின் விற்பனை பண்டமாக மாற்றிய பின்பு இந்த கல்வி கொள்கை யாருக்கு பயன்படும். முதலாளிகள் லாபம் ஈட்ட உதவுமே ஒழிய, மாணவர்களுக்கு அறிவை வளர்க்க பயன்படாது. 

எல்லா தேசிய இனங்களையும் கொன்றுவிட்டு ஒரே மொழி, ஒரே மதம், ஒரே ரேசன் கார்டு, ஒரே தேர்தல், ஒரே கட்சி, ஒரே ஆட்சி, ஒரே அதிகாரம் அதை நோக்கி நீங்கள் போகிறீர்கள் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

.