This Article is From Aug 19, 2020

சுஷாந்த் சிங் தற்கொலை: சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Sushant Singh Rajput case: தொடர்ந்து, மும்பை போலீசார் சேகரித்த அனைத்து ஆதாரங்களையும் சிபிஐ வசம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுஷாந்த் சிங் தற்கொலை: சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஹைலைட்ஸ்

  • Supreme Court asked Mumbai Police to hand over all evidence to CBI
  • Big win for Bihar in its tussle with Maharashtra over the probe
  • Rhea Chakraborty wanted FIR against her transferred from Patna to Mumbai
New Delhi:

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து, மும்பை போலீசார் சேகரித்த அனைத்து ஆதாரங்களையும் சிபிஐ வசம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் பீகாரில் பதிவு செய்யப்பட்ட முதல்கட்ட தகவல் அறிக்கை செல்லும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். எனினும், அது தற்கொலை அல்ல, கொலை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக அவரது சொந்த மாநிலமான பீகாரில் அம்மாநில அரசு விசாரணை நடத்தி வருகிறது.

சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்ட மகாரஷ்டிராவிலும் அம்மாநில அரசு விசாரணை செய்து வருகிறது. இதில் இரு மாநில அரசுகளுக்கு இடையேயும் மோதல் போக்கு நிலவியது. 

இதைத்தொடர்ந்து, ஒரு கட்டத்தில் சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ வசம் ஒப்படைந்தது பீகார் அரசு. இதற்கு மகாராஷ்டிரா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில், பீகார் அரசுக்கு பெரும் வெற்றியாக சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நடிகை ரியா சக்ரவர்த்தி, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலி, பாட்னாவில் அவரது குடும்பத்தினர் பதிவு செய்த முதல்கட்ட தகவல் அறிக்கையை மும்பைக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையில், மும்பை காவல்துறையினர் தற்செயலான மரண அறிக்கையை மட்டுமே பதிவு செய்துள்ளதால், அதற்கு விசாரணை அதிகாரம் குறைவாகவே உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. எனினும், பீகார் காவல்துறையினர் "முழு அளவிலான எஃப்.ஐ.ஆர்" பதிவு செய்துள்ளனர், இது ஏற்கனவே சிபிஐக்கும் மாற்றப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து அனைத்து உதவிகளையும் வழங்குமாறு மகாராஷ்டிரா அரசு கேட்டுக் கொண்டுள்ளது. சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக வேறு ஏதேனும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அதுவும் சிபிஐ மூலம் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜுன் மாதம் மும்பையில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தை மும்பை போலீசார் தற்கொலை என்றே குறிப்பிட்டு வந்தனர். மேலும், அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்றும், திரைப்படத் துறையினரால் அழுத்தத்திற்கு உள்ளானதாகவும் மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.

சுஷாந்த் சிங் தற்கொலை செய்திருக்கலாம் எனக் கருதப்பட்டாலும், தனது மகன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது காதலி ரியா சக்ரவர்த்தியின் மீது சுஷாந்த் சிங்கின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, சுஷாந்த் சிங்கின் வங்கி கணக்கில் இருந்து கோடிக்கணக்கான பணம் எடுக்கப்பட்டுள்ளதாக அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் பீகார் போலீசார் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இயக்குநரகம் விசாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 

இதையடுத்து, சுஷாந்த் சிங்கின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் குற்றம்சாட்டப்பட்ட ரியா சக்ரவர்த்தி சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதனால், சிபிஐ வசம் சென்ற பீகார் வழக்கை மும்பைக்கு மாற்ற வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றம் சென்றார். 

.