Read in English
This Article is From Aug 19, 2020

சுஷாந்த் சிங் வழக்கை உச்ச நீதிமன்றம் சிபிஐ வசம் ஒப்படைக்க 5 முக்கிய காரணங்கள்!

Sushant Singh Rajput Case: தொடர்ந்து, ஒரு பக்கச்சார்பற்ற விசாரணை என்பது காலத்தின் தேவை" என்று வலியுறுத்தியுள்ள நீதிமன்றம், மும்பை போலீசார் சேகரித்த அனைத்து ஆதாரங்களையும் சிபிஐ வசம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

Advertisement
இந்தியா ,

சுஷாந்த் சிங் வழக்கை உச்ச நீதிமன்றம் சிபிஐ வசம் ஒப்படைக்க 5 முக்கிய காரணங்கள்!

Highlights

  • Supreme Court ruled that CBI would take over Sushant Rajput case probe
  • Top court asked Mumbai Police to hand over all evidence to CBI
  • Sushant Singh Rajput was found dead in his Mumbai apartment on June 14
New Delhi:

டிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து, ஒரு பக்கச்சார்பற்ற விசாரணை என்பது காலத்தின் தேவை" என்று வலியுறுத்தியுள்ள நீதிமன்றம், மும்பை போலீசார் சேகரித்த அனைத்து ஆதாரங்களையும் சிபிஐ வசம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும், சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக வேறு ஏதேனும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அதுவும் சிபிஐ மூலம் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் கூறிய முக்கிய காரணங்கள்:

  • சுஷாந்த் சிங் ராஜ்புத் ஒரு திறமையான நடிகர், அவரது முழு திறனை உணர்ந்து கொள்வதற்கு முன்பே உயிரிழந்துள்ளார்.
     
  • விசாரணையின் முடிவுக்காக சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் குடும்பத்தினரும், அவரது அபிமானிகளும் காத்திருக்கிறார்கள். அதனால் சுற்றி வரும் ஊகங்களை நிறுத்துவதற்கு, ஒரு பக்கச்சார்பற்ற விசாரணை என்பது காலத்தின் தேவை.
  • விசாரணையின் முடிவு மட்டுமே, தனது ஒரே மகனை இழந்த சுஷாந்த் சிங்கின் தந்தைக்கு கிடைக்கும் நீதியாகும்.

  •  இரு மாநிலங்களும் (பீகார், மகாராஷ்டிரா) ஒருவருக்கொருவர் அரசியல் தலையீடு செய்வதாக கடுமையான குற்றச்சாட்டுகளை கூறும்போது, விசாரணையின் நியாயத்தன்மை ஒரு கோட்டின் கீழ் வருகிறது. ஒரு பக்கச் சார்பற்ற விசாரணையால் அவதூறு பிரச்சாரத்தின் இலக்குகளுக்கு ஆளாகும் அப்பாவிகளுக்கு நீதி கிடைக்கும்.

  • உண்மை வெளிச்சத்திற்கு வரும் போது, வாழ்பவர்களுக்கு மட்டும் நீதி மேலோங்காது, பாதிக்கப்பட்டவர்களும் நிம்மதி அடைவார்கள். சத்யமேவ ஜெயதே.
     

Advertisement