This Article is From Jun 17, 2020

சுஷாந்த் சிங் தற்கொலைக்கு தொழில்போட்டி காரணமா? - அமைச்சர் தகவலால் பரபரப்பு

சுஷந்த் சிங்கின் வீட்டிலிருந்து எந்தவொரு கடிதமும் கைப்பற்றப்படவில்லை.  பிரேத பரிசோதனையில் தூக்கில் தொங்கியதால் ஏற்பட்ட சுவாச நிறுத்தம் காரணமாக அவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுஷாந்த் சிங் தற்கொலைக்கு தொழில்போட்டி காரணமா? - அமைச்சர் தகவலால் பரபரப்பு

சுஷந்த் சிங்கின் மரணம் இந்தி திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹைலைட்ஸ்

  • Sushant Singh Rajput killed himself at his home in Mumbai's Bandra
  • Minister says there were reports that the actor was depressed
  • No suicide note has been found from the actor's apartment
Mumbai:

பிரபல இந்தி நடிகர் சுஷந்த் சிங்  தற்கொலை செய்து கொண்டதற்கு தொழில் போட்டி ஏதும் காரணமாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக மகாராஷ்டிர  அமைச்சர் வெளியிட்டிருக்கும் தகவல் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்தி திரையுலகை கலக்கி வந்த இளம் நடிகர் சுஷந்த் சிங் ராஜ்புத் மும்பையில் கடந்த ஞாயிறன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  அவரது இறுதி சடங்கு நேற்று நடைபெற்றது.

இதையொட்டி கடந்த 2 நாட்களாக அவருக்கு பிரதமர் மோடி முதல் பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சுஷந்தின் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சுஷந்தின் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, சுஷந்தின் தற்கொலைக்கு தொழில் போட்டியால் எழுந்த மன அழுத்தமே காரணம் என்ற தகவல்களும் வெளிவந்தன.  இந்த கோணத்திலும் விசாரணை நடத்தப்படும் என்று மகாராஷ்டிர உள்துறை  அமைச்சர் அனில் தேஷ் முக் தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில், 'பிரேத பரிசோதனையின்படி, சுஷந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. தொழில்  போட்டியால் எழுந்த கடும் மன அழுத்தத்தால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என சில ஊடகங்கள் சந்தேகம் கிளப்பியுள்ளன. அந்த கோணத்திலும் விசாரணை நடத்தப்படும்' என்று அனில்  தேஷமுக் கூறியுள்ளார்.

சுஷந்த் சிங்கின் வீட்டிலிருந்து எந்தவொரு கடிதமும் கைப்பற்றப்படவில்லை.  பிரேத பரிசோதனையில் தூக்கில் தொங்கியதால் ஏற்பட்ட சுவாச நிறுத்தம் காரணமாக அவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுஷாந்த் இறந்ததைத் தொடர்ந்து பாலிவுட் நட்சத்திரங்கள் பலர், அவருக்கு அஞ்சலி செலுத்தி தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவுகள் இட்டனர். அதில் பாலிவுட்டின் பிரபல இயக்குநர் கரண் ஜோகர் மற்றும் பிரபல முன்னணி நடிகை ஆலியா பட் ஆகியோரும் அடங்குவர். இவர்கள் இருவர்தான் தற்போது சுஷாந்த் மரணத்தைத் தொடர்ந்து, நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்படும் நபர்களாக உள்ளனர்.

காரணம், கரண் ஜோகர், ‘Koffee With Karan' என்கிற பிரபல டிவி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருப்பவர். இந்த நிகழ்ச்சியில் ஒரு குறிப்பிட்ட சாரரே அழைக்கப்பட்டனர் என்றும், பல ஹிட் திரைப்படங்கள் கொடுத்த சுஷாந்த் அழைக்கப்படவில்லை என்பதும் குற்றச்சாட்டு. அதேபோல ‘காஃபி வித் கரண்' ஷோவில் ஒரு முறை பங்கேற்ற ஆலியாவிடம் சுஷாந்த் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் வேடிக்கையாக, ‘சுஷாந்த் சிங் ராஜ்புத் என்றால் யார்?' என்றார்.

இப்படிப்பட்ட சூழலில்தான் இயக்குநர் நிகில் திவேதி, ‘சில நேரங்களில் நம் திரைப்பட உலகின் இந்த போலித்தனம் என்னை கோபமடையச் செய்கிறது. சுஷாந்திடம் தொடர்பில் இருக்க வேண்டும் என்று இப்போது பதிவிடுகிறார்கள். நீங்கள் அவரிடம் தொடர்பிலேயே இல்லை. காரணம், அவரின் பாலிவுட் வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இருக்கவில்லை. எனவே வாயைப் பொத்திக் கொள்ளுங்கள். நீங்கள் இம்ரான் கான், அபே தியோல் போன்றவர்களுடன் தொடர்பில் இருக்கிறீர்களா? இல்லை! ஆனால், அவர்கள் பாலிவுட்டில் பிரபலமாக இருந்தபோது தொடர்பில் இருந்தீர்கள் அல்லவா?' என்று கொதிப்புடன் பதிவிட்டுள்ளார். திவேதியின் பதிவு யாரைக் குறிப்பிடுகிறது என்று நேரடியாக தெரியவில்லை என்றாலும், அது கரண் ஜோகரை சுட்டுவதாக யூகிக்க முடிகிறது.

.