বাংলায় পড়ুন Read in English
This Article is From Aug 01, 2018

திருமணத்துக்கு முன்னர் பாஸ்போர்டை தொலைத்த நபர்… உதவிக்கரம் நீட்டிய சுஷ்மா!

இன்னும் சில நாட்களில் திருமணம் ஆக உள்ள நிலையில், தனது பாஸ்போர்ட்டைச் இந்தியாவைச் சேர்ந்த நபர் தொலைத்திவிட்டிருக்கிறார்

Advertisement
விசித்திரம்

இன்னும் சில நாட்களில் திருமணம் ஆக உள்ள நிலையில், தனது பாஸ்போர்ட்டைச் இந்தியாவைச் சேர்ந்த நபர் தொலைத்திவிட்டிருக்கிறார். என்ன செய்வதென்று அறியாமல் குழம்பிய அவர் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு பிரச்னையை விளக்கி ஒரு ட்வீட் செய்துள்ளார். அதற்கு சுஷ்மா உடனடியாக பதிலளித்த சம்பந்தப்பட்ட நபரை நெகிழச் செய்துள்ளார்.

 

தேவாதா ரவி தேஜா, சுஷ்மாவுக்கு தட்டிய ட்வீட்டில், ‘எனது பாஸ்போர்ட்டை நான் அமெரிக்காவின் வாஷிங்டனில் தொலைத்துவிட்டேன். இந்த மாதம் 13 முதல் 15 ஆம் தேதி வரை எனது திருமணம் நடக்க உள்ளது. இதற்கு ஆகஸ்ட் 10 ஆம் தேதி நான் புறப்பட வேண்டும். எனவே, தட்கல் முறையில் நான் பாஸ்போர்டுக்கு விண்ணப்பம் செய்துள்ளதை சீக்கிரமாக பரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் தான் எனது ஒரே நம்பிக்கை. வேண்டியதைச் செய்யுங்கள்’ என்று பதிவிட்டிருந்தார். 

 

 

Advertisement

 

 

அதற்கு சுஷ்மா, ‘தேவாதா, மிகவும் தவறான தருணத்தில் உங்கள் பாஸ்போர்டை நீங்கள் தவறவிட்டிருக்கிறீர்கள். ஆனால், உங்கள் திருமணத்திற்கு சரியான நேரத்தில் வர நாங்கள் உதவி செய்வோம்’ என்று பதிலளித்தார். அதற்கு தேவாதா, ‘மிக்க நன்றி. இது மிகப் பெரிய உதவியாகும். நன்றி’ என்று பதில் ட்வீட் போட்டார்.

Advertisement

 

 

வெளிநாட்டில் பாஸ்போர்டை தவறவிட்டவர்களில் பலர் இதைப் போலத்தான் சுஷ்மாவின் ட்விட்டரில் தெரியபடுத்துவர். அதற்கு சுஷ்மா உடனடியாக வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பார். அதன் தொடர்ச்சியாகவே இந்த சம்பவமும் இருந்துள்ளது. இதனால் நெட்டிசன்கள் மத்தியில் சுஷ்மாவுக்கு நல்ல பெயர் உள்ளது.

Advertisement