Read in English
This Article is From Jun 27, 2018

இனி இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமானாலும் பாஸ்போர்ட் எடுக்கலாம்

இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமானாலும் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்க முடியும்

Advertisement
இந்தியா
New Delhi:

புது தில்லி : வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இன்று ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இத்திட்டத்தின் கீழ் இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமானாலும் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்க முடியும்.

மேலும், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்கு தளங்களில் செயலி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளார் சுஷ்மா. அதில் பாஸ்போர்ட்டை பெறுவதற்கான விண்ணப்பம், பணம் செலுத்துதல் மற்றும் நேர்முகத் தேர்வுக்கான தேதியையும் தெரிந்து கொள்ளலாம்.

ஆறாவது பாஸ்போர்ட் சேவா திவாஸ் நிகழ்ச்சியின் போது அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய திட்டத்தின் கீழ், ஒரு நபர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வட்டார பாஸ்போர்ட் அலுவலகம் (RPO) மற்றும் பாஸ்போர்ட் சேவா கேந்திரா (P.S.k) அல்லது தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவா கேந்திரா (POPSK) ஆகியவற்றை தேர்ந்தெடுக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டார பாஸ்போர்ட் அலுவலகத்தின் அதிகார எல்லைக்குள் நபரின் தற்போதைய குடியிருப்பு முகவரி இருக்கிறதா , இல்லையா என்பதை பொருட்படுத்தாமல் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியும், என வெளியுறவு துறை அமைச்சகம் (MEA) அறிக்கை கூறுகிறது.

ஒரு குறிப்பிட்ட பாஸ்போர்டுக்கு போலீஸ் சரிபார்ப்பு தேவைப்பட்டால், விண்ணப்ப படிவத்தில் குறிப்பிடப்பட்ட முகவரியில் நடத்தப்படும்.

பாஸ்போர்ட் விண்ணப்ப படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு, பாஸ்போர்ட் அச்சிடப்பட்டு அனுப்பப்படும்

உதாரணமாக, கொல்கத்தாவில் தற்காலிகமாக வசிக்கும் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒருவர், இப்போது கொல்கத்தாவில் விண்ணப்பிக்க முடியும், மேலும் ஜெய்ப்பூருக்கு மீண்டும் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்க்காகச் செல்ல வேண்டியதில்லை.

Advertisement