This Article is From May 30, 2019

மோடியின் புதிய அமைச்சரவையில் சுஷ்மா சுவராஜ் பங்கு வகிக்கவில்லை!

மக்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் விரைந்து செயல்படுவதன் காரணமாக சமூகவலைதளங்களில் மிகவும் பிரபலமான அமைச்சராக இருந்து வந்தவர் சுஷ்மா சுவராஜ்.

மோடியின் புதிய அமைச்சரவையில் சுஷ்மா சுவராஜ் பங்கு வகிக்கவில்லை!

9 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சுஷ்மா இந்த முறை உடல்நிலை காரணமாக தேர்தலில் போட்டியிடவில்லை.

New Delhi:


முந்தைய ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த சுஷ்மா சுவராஜ், இன்று நடைபெறும் பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்துள்ளதன் மூலம், முதல்முறையாக அவர் பாஜக அமைச்சரவையில் பங்கேற்கவில்லை என்று தெரிகிறது. 

மக்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் விரைந்து செயல்படுவதன் காரணமாக சமூகவலைதளங்களில் மிகவும் பிரபலமான அமைச்சராக இருந்து வந்தவர் சுஷ்மா சுவராஜ். தொடர்ந்து, இன்று காலை முதல் முக்கிய அமைச்சரவையில் சுஷ்மா இடம்பெறுவார் என்று அவரது பெயரும் கூறப்பட்டு வந்தது. 

தொடர்ந்து, இன்று மாலை நடந்த பிரதமர் மோடியின், தேநீர் விருந்தில் சுஷ்மா சுவராஜ் பங்கேற்காததன் மூலம் அவர் மோடியின் புதிய அமைச்சரவையில் பங்கேற்கவில்லை என்று தெரியவந்தது. 9 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சுஷ்மா இந்த முறை உடல்நிலை குறைவு காரணமாக தேர்தலில் போட்டியிடவில்லை.

எனினும், சிறப்பாக செயல்படும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவரை விட்டுவிடக்கூடாது என்ற காரணத்திற்காக அவரை மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1990களில் வாஜ்பாய் தலைமையிலான அரசிலும் சுஷ்மா அமைச்சராக செயல்பட்டார். கடந்த 2016ல் அவருக்கு சர்க்கரை வியாதி காரணமாக சிறுநீரக மாற்றுச்சிகிச்சை செய்து சிறிது காலம் ஒய்வில் இருந்தார்.  


 

.