This Article is From Aug 07, 2019

இறப்பதற்கு முன் கடைசியாக சுஷ்மா பதிவிட்ட நெகிழ்ச்சியான ட்வீட்!

ஜம்மு-காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது குறித்த, மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது குறித்து கடைசியாக சுஷ்மா தனது ட்வீட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

இறப்பதற்கு முன் கடைசியாக சுஷ்மா பதிவிட்ட நெகிழ்ச்சியான ட்வீட்!

சுஷ்மா வெளியுறவு அமைச்சராக இருந்தபோது, ட்விட்டரில் விரைந்து பதிலளித்ததற்காக மிகவும் விரும்பப்பட்டார்.

New Delhi:

பாஜக மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் உடல்நலக் குறைவால் நேற்று இரவு உயிரிழந்தார். பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய ஆட்சியில் அவர் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர்.

வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் தன்னுடைய ட்விட்டரில் தீவிரமாக செயல்பட்டவர். பல்வேறு விவகாரங்கள் குறித்து அவ்வவ்போது ட்விட்டரில் கருத்துக்களையும், செய்திகளையும் பதிவிட்டு வந்தவர்.

இந்நிலையில், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கடைசியாக காஷ்மீர் மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. என்னுடைய வாழ்நாளில் இந்த தருணத்தை பார்ப்பதற்காகத் தான் காத்திருந்தேன் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

au2oibrg

சுஷ்மாவின் இந்த கடைசி ட்வீட்டை 1,42,000 பேர் லைக் செய்துள்ளனர், 35,000 பேர் ரீட்வீட் செய்துள்ளனர். ட்வீட்டரில் சுஷ்மாவை 13 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். சமூக ஊடகங்களில் இந்திய அரசியல்வாதிகளில் அதிகம் பேர் பின்தொடர்பவர்களில் முதலிடத்தில் உள்ளார் சுஷ்மா.

இந்த ட்வீட்டிற்கு முன்பாக நேற்று முன்தினம், மாநிலங்களவையில் காஷ்மீர் மறுவரையறை மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்து பேசியதற்கு வாழ்த்து தெரிவித்து சுஷ்மா சுவராஜ் ட்வீட் செய்திருந்தார்.

சுஷ்மா வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில், வெளிநாட்டில் சிக்கிக் கொண்ட பல்வேறு இந்தியர்களை மீட்டு தாயகம் கொண்டு வந்தவர்.

குறிப்பாக சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் சிக்கிய 46 இந்திய செவிலியர்களை பத்திரமாக மீட்டு வர நடவடிக்கை மேற்கொண்டார். வளைகுடா நாடுகளில் கொத்தடிமைகளாக இருந்த இந்தியர்கள் மீட்பு, நைஜீரியாவில் சிக்கிய இந்திய மாலுமிகள் மீட்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை துரிதமாக செய்துமுடித்தார் சுஷ்மா.

.