This Article is From Jul 16, 2018

மிஸ்ஸோரி மாகாண உணவகத்தில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட நபரை சுட்டுக்கொன்ற அமெரிக்க போலீஸ்

நிற்காமல் சென்ற வாகனத்தை போலீஸார் மடக்கியதில், அதில் இருந்த நபர் போலீஸாரை நோக்கி சுட்டதில் மூன்று போலீஸார் காயமடைந்துள்ளனர்

மிஸ்ஸோரி மாகாண உணவகத்தில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட நபரை சுட்டுக்கொன்ற அமெரிக்க போலீஸ்

ஹைலைட்ஸ்

  • 25 வயதான சுரேஷ் கொப்பு கடந்த 6ம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலி
  • சுரேஷ் கொப்பு தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்
  • கொலையாளியை பற்றிய தகவலை போலீஸார் இதுவரை வெளியிடவில்லை
Washington:

அமெரிக்காவின் மிஸ்ஸோரி மாகாணத்தின் உணவகம் ஒன்றில் துப்பாக்கிச்சூட்டில் இந்திய வாலிபர் ஒருவரை சுட்டுக்கொன்ற கொலையாளி போலீஸாருடன் நடந்த தாக்குதலில் பலியானதாக அமெரிக்க போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த சுரேஷ் கொப்பு என்கிற வாலிபர், கடந்த சில தினங்களுக்கு முன் மிஸ்ஸோரி மாகாணத்தின் உணவகம் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட நபர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

sharath koppu web

இந்நிலையில், மிஸ்ஸோரி மாகாணத்தின் புறநகர் பகுதி ஒன்றில் நடந்த வாகன சோதனையின்போது, நிற்காமல் சென்ற வாகனத்தை போலீஸார் மடக்கியதில், அதில் இருந்த நபர் போலீஸாரை நோக்கி சுட்டதில் மூன்று போலீஸார் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் போலீஸார் திருப்பி சுட்டதில், அந்த நபர் சம்பவ இடத்திலேயே பலியானார் என்றும், விசாரணையில் அந்த நபர் தான் கான்சாஸ் உணவகத்தில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.

.