This Article is From Jan 30, 2019

ராகுலை விமர்சித்ததால் சஸ்பெண்டான ஆசிரியருக்கு மீண்டும் பணி

மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் கூறுகையில், ''கருத்துச் சுதந்திரத்தை ஏற்கிறேன். அதற்காக ஒருவரை தரம் தாழ்ந்தி, அவமானப்படுத்தி பேசுவதை ஏற்க முடியாது'' என்று கூறியுள்ளார்.

ராகுலை விமர்சித்ததால் சஸ்பெண்டான ஆசிரியருக்கு மீண்டும் பணி

பேஸ்புக்கில் ராகுல் காந்தியை விமர்சித்து தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவர் பதிவிட்டிருந்தார்.

New Delhi:

மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தியை விமர்சித்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் ஒருவர் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், எதிரிகளையும் மன்னிக்கும் மனப்பக்குவம் கொண்டவர் ராகுல் என்று கூறினார். 

கருத்துச் சுதந்திரத்தை ஏற்கிறேன். அதற்காக ஒருவரை தரம் தாழ்ந்தி, அவமானப்படுத்தி பேசுவதை ஏற்க முடியாது என்றும் கமல்நாத் தெரிவித்துள்ளார். 

ரத்ளம் பகுதியில் தலோத் கிராமத்தை சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் முகேஷ் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து பேஸ்புக்கில் வீடியோவை பதிவிட்டிருந்தார். திருடன் என பொருள்படும் 'டாகு' என்ற வார்த்தையை ஆசிரியர் பயன்படுத்தியிருந்தார். 

இந்த வீடியோ மாநிலம் முழுவதும் வைரலாக பரவியது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து மாநில அரசு நடவடிக்கை எடுத்திருந்தது. இந்த நிலையில் ஆசிரியர் முகேஷ் மீண்டும் பணிக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். 

.