மார்ச் 23 முதல் இந்தியாவில் திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
New Delhi: நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 36 லட்சத்தினை கடந்துள்ள நிலையில், சமீபத்தில் மத்திய அரசு அன்லாக் 4-ன் தளர்வுகளை அனுமதித்திருந்தது.
இதன் படி மெட்ரோ ரயில் சேவைகளைத் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடையை மத்திய அரசு செப்.30 வரை நீட்டித்துள்ளது.
இது குறித்த அறிவிப்பினை இந்திய விமான ஒழுங்குமுறை ஆணையம் (DGCA) வெளியிட்டுள்ளது. மேலும், “சர்வதேச வழித்தட விமானங்களைத் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் அனுமதிக்கலாம்.” என சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக கொரோனா தொற்று பரவல் நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் 23 முதல் பரவலான சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை விதிக்கப்பட்டது.
இந்த தடைகளுக்கிடையில், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வந்திருக்கின்றது.
இந்திய விமான ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி சிறப்பு விமானங்கள், சர்வதேச சரக்கு விமானங்களுக்கு தடையில்லை என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.