This Article is From Mar 30, 2019

மெட்ரோ பணியின்போது ஆங்கிலேயர் காலத்து சுரங்கபாதை கண்டுபிடிப்பு!

பூனேவில் நடந்து வரும் மெட்ரோ ரயில் பணிகளின் போது 100 ஆண்டு பழமையான சுரங்கபாதை ஓன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ பணியின்போது ஆங்கிலேயர் காலத்து சுரங்கபாதை கண்டுபிடிப்பு!
Pune:

பூனேவில் நடந்து வரும் மெட்ரோ ரயில் பணிகளின் போது 100 ஆண்டு பழமையான சுரங்கபாதை ஓன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கண்டு பிடிக்கப்பட்ட இந்த சுரங்க பாதை சுமார் 90 வருடங்கள் பழமையாக இருக்கும் என அங்குள்ள வரலாற்று ஆசிரியர் மாந்தார் லாவாடே கூறினார்.

இந்த சுரங்க பாதை ஆங்கேலயர் காலத்தில் கட்டப்பட்டிருக்க கூடும், இந்த பாதை பெரும்பாலும் தண்ணீரை கொண்டு செல்லவே பயன்படுத்தப்பட்டது. இந்த சுரங்கபாதை இருக்கும் இடத்தின் அருகாமையில் ஸ்வார்காடே நதி இருந்ததால் இது நிச்சயமாக தண்ணீரை கொண்டு செல்ல உதவி இருக்கும் என நம்படுகிறது.

மேலும் இந்த சுரங்க பாதை 12 முதல் 15 அடி தரைக்கு கீழே இருந்தது 1.4 மீட்டர் அகலமும் 3.5 மீட்டர் உயரம் கொண்டுள்ளது.  இந்த சுரங்கபாதையை மெட்ரோ பணிகளுக்காக தோண்டிக்கொண்டிருக்கும் போது கிடைத்ததாகவும் இந்த சுரங்கப்பாதையின் இரண்டு புறத்திலும் அமைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார்1200 மி.மீ அகலம் கொண்ட குழாயும் இந்த சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்டிருப்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

.