This Article is From Aug 21, 2020

பணிக்கு திரும்பிய ஊழியர்கள்: சென்னையில் 100 சதவீத சேவை தொடக்கம்: ஸ்விக்கி அறிவிப்பு

இதன் விளைவாக, எங்கள் உணவு விநியோக ஊழியர்கள் பெரும்பாலானோர் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர். நேற்றைய நிலவரப்படி, நாங்கள் சென்னையில் 100 சதவீத சேவையை தொடங்கியுள்ளோம்.

பணிக்கு திரும்பிய ஊழியர்கள்: சென்னையில் 100 சதவீத சேவை தொடக்கம்: ஸ்விக்கி அறிவிப்பு

பணிக்கு திரும்பிய ஊழியர்கள்: சென்னையில் 100 சதவீத சேவை தொடக்கம்: ஸ்விக்கி அறிவிப்பு

Chennai:

சென்னையில் நூறு சதவீத சேவையை மீண்டும் தொடங்கியுள்ளதாக உணவு விநியோக தளமான ஸ்விக்கி நிறுவனம் என்டிடிவிக்கு தெரிவித்துள்ளது. 

சம்பளக் குறைப்பு நடவடிக்கை காரணமாக ஸ்விக்கி உணவு விநியோக ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, அந்நிறுவனம் சம்பள அளவை மீண்டும் திருத்தி நிர்ணயித்ததை தொடர்ந்து, மீண்டும் பணிக்கு திரும்ப ஊழியர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். 

இதுதொடர்பாக ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த இரண்டு நாட்களாக எங்கள் உணவு விநியோக ஊழியர்களுடன் திருத்தி அமைக்கப்பட்ட சம்பளத்தை விளக்குவதற்கும், அவர்களின் குறைகளை தீர்ப்பதற்கும் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவு ஏற்பட்டுள்ளது. 

இதன் விளைவாக, எங்கள் உணவு விநியோக ஊழியர்கள் பெரும்பாலானோர் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர். நேற்றைய நிலவரப்படி, நாங்கள் சென்னையில் 100 சதவீத சேவையை தொடங்கியுள்ளோம்.

திருத்தி அமைக்கப்பட்டுள்ள சேவைக் கட்டணம் மற்றும் சம்பளம் தொழில்துறையில் சிறந்ததாக உள்ளது. உணவு விநியோக ஊழியர்களே எங்களின் முதுகெலும்பு என்றும் ஸ்விக்கி தெரிவித்துள்ளது. 

மேலும், உணவு விநியோக ஊழியர்கள் கடந்த வாரம் ஒரு ஆர்டருக்கு ரூ.45க்கும் கூடுதலாக சம்பாதித்து வந்தனர். இதில், அதிக செயல்திறன் கொண்ட ஊழியர்கள் ஒரு ஆர்டருக்கு ரூ.100க்கும் மேல் சம்பாதிக்கிறார்கள். 

உணவு விநியோக ஊழியர்கள் குறைவான சம்பளம் தரப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அந்நிறுவனம் கூறும்போது, சென்னையில் எந்த ஸ்விக்கி உணவு விநியோக ஊழியரும் ரூ.15க்கு குறைவாக ஒரு ஆர்டருக்கு சம்பாதிப்பது இல்லை. 

ஒரு ஆர்டருக்கு ரூ.15 என்பது ஏழு விதமான சேவைக் கட்டணத்தின் கூறுகளில் ஒன்றாகும் என்று அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 

சென்னையில் கடந்த வாரம் முதல் ஸ்விக்கியில் பணிபுரியும் உணவு விநியோக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஸ்விக்கி உணவு விநியோக ஊழியர் ஒருவர் அளித்த பேட்டியில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஒவ்வொரு டெலிவரிக்கும் ரூ.40 ஊதியமாக பெற்று வந்தேன். தற்போது பெட்ரோல் விலை அதிகரித்துள்ள நிலையில், ஒரு டெலிவரிக்கு ரூ.10 மட்டுமே வழங்கப்படுகிறது. 

இதனால், ஒரு நாளைக்கு ரூ.800 வரை சம்பாதித்து வந்த நாங்கள், தற்போது ரூ.200 மட்டுமே பெறுகிறோம். இதனை வைத்துக்கொண்டு எங்கள் குழந்தைகளுக்கு எப்படி உணவளிக்க முடியும்? என்று அவர் கூறியிருந்தார். 

கொரோனா தொற்றுநோய் பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக மற்ற நிறுவங்களை போல ஸ்விக்கியும், மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது. கடந்த மே மாதத்தில் நிறுவனத்தில் பணிபுரிந்த 1000க்கும் மேற்பட்டோரை பணிநீக்கம் செய்த நிலையில், கடந்த மாதம் மட்டும் 350 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. 
 

With input from ANI

.