பன்றிக் காய்ச்சலால் உயிரிந்தோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் அதிகம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவனைக்கு சென்று அங்கு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் விதம், சுகாதார வசதிகள் உள்ளிட்டவை குறித்து ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது-
பன்றிக் காய்ச்சலால் கடந்த ஆண்டு தமிழகத்தில் 3,800 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் அந்த எண்ணிக்கை நடப்பாண்டில் 2,100-ஆக குறைந்து விட்டது.
இருப்பினும், கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் உயிரிழப்புகள் அதிகம். 2017-ல் 17 பேர் உயிரிழந்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டில், முதியோர்கள், மூச்சுத் திணறல் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் உள்ளிட்டோர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் உயிரிழப்பின் எண்ணிக்கை 37-ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.