2 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது
Mumbai: மகாராஷ்டிராவில் கடந்த 10 மாதங்களில் மட்டும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 268-ஆக உயர்ந்துள்ளது என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி முதல் தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில் காய்ச்சல் மேலும் பரவுவதை தடுக்கும் வகையிலும், பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக குணம் அடையும் விதமாகவும் மாநில சுகாதார அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது.
பன்றி காய்ச்சல் பாதிப்பு குறித்து மாநில சுகாதார அமைச்சர் தீபக் சாவந்த் கூறுகையில், நோயாளிகள் அச்சப்பட தேவையில்லை. காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
மகாராஷ்டிராவில் தற்போது வரை 2,300 பேர் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகியிருப்பதாக தகவல்கள்தெரிவிக்கின்றன.