Read in English
This Article is From Feb 20, 2019

தெலங்கானாவில் பரவும் பன்றிக் காய்ச்சல் – 496 பேர் அட்மிட்!

வெப்பநிலை மாற்றம் காரணமாக பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Advertisement
இந்தியா

தெலங்கானாவில் இதுவரைக்கும் 496 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Hyderabad :

தெலங்கானாவில் நிலவும் மோசமான வெப்பநிலை காரணமாக பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது. இதுவரைக்கும் 496 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி மாதத்தில் மட்டும் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் 1657 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தனர். அவர்களில் 307 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதேபோன்று இந்த மாதத்தில் 1,108 பேருக்கு அறிகுறி இருந்ததில், 189 பேருக்கு காய்ச்சல் இருப்பது கன்ஃபார்ம் செய்யப்பட்டது.

பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பின் ஒருவருக்கு காய்ச்சல், இருமல், தலைவலி, பசியின்மை உள்ளிட்டவை ஏற்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு டாமி ஃப்ளூ மாத்திரைகள் அளிக்கப்படுகின்றன.

Advertisement