தெலங்கானாவில் பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது
Hyderabad: எச் 1 என் 1 வைரஸ் தாக்குதலால் ஏற்படும் ஸ்வைன் ஃப்ளூ அல்லது பன்றிக்காய்ச்சல் தெலங்கானா மாவட்டத்தில் பரவி வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் 50-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரி சங்கர் அளித்த பேட்டியில், கடந்த ஒரு வாரமாக பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்போது வரை சுமார் 50 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்து வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம்.
தெலங்கானாவில் பன்றிக் காய்ச்சல் அறிகுறியை சோதனை செய்வதற்கு 2 மையங்கள் மட்டுமே உள்ளன என்று தெரிவித்தார். இதற்கிடையே, சுகாதாரத்துறை அதிகாரிகள் பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொண்டு வருகின்றனர்.