This Article is From Jun 15, 2018

விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவி: 13 பேர் குற்றமற்றவர்கள் என சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பு

30 ஆண்டுகளாக நடந்து வந்த தமிழ் ஈழ் உரிமை போர் காரணமாக, இலங்கையில் இருந்து சுவிட்சர்லாந்தில் குடியேறிய தமிழர்கள் ஏராளம்

Advertisement
உலகம் Posted by

Highlights

  • நிதி உதவி செய்ததாக 13 பேர் மீது 2009-ம் ஆண்டு வழக்கு
  • விடுதலைப் புலிகளின் குற்றப் பின்னணியை நிரூபிக்க ஆதாரம் போதவில்லை
  • 13 பேரும் குற்றமற்றவர்கள் என தீர்ப்பு
இலங்கை, தமிழ் ஈழ விடுதலை புலிகளுக்கு நிதி உதவி செய்ததாக சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் 13 தமிழர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த சுவிட்சர்லாந்தின் உச்ச நீதிமன்றம், 13 பேர் மீது செல்லப்பட்ட குற்றச்சாட்டுக்கு தகுந்த ஆதாரம் இல்லை எனக்கூறி அவர்களை வழக்கில் இருந்து விடுதலை செய்தது. இந்த வழக்கு 9 ஆண்டுகளாக நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

13 பேரில் 5 பேர் முற்றிலுமாக விடுவிக்கப்பட்டனர். மீதம் உள்ளவர்களுக்கு, “சஸ்பெண்டட் சென்டென்ஸ் “ எனப்படும், தண்டனையை நடைமுறைப்படுத்தும் காலத்தை தள்ளி வைத்தும் உத்தரவிடப்பட்டுள்ளதாக, ஏ.டி.எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளத.

13 பேரில் 12 பேர் சுவிட்சர்லாந்து நாட்டு குடியுரிமை பெற்ற தமிழர்கள். ஒருவர் ஜெர்மனியைச் சேர்ந்தவர். 8 வாரங்களாக நடந்து வந்த இறுதிக் கட்ட விவாதங்களில், அரசு தரப்பு வழக்கறிஞர், 13 பேருக்கும் ஆறரை ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என வாதாடியதாகவும், ஏ.டி.எஸ் கூறியுள்ளது.

Advertisement
மேலும், ஒருங்கிணைந்த உலகத் தமிழ் கூட்டமைப்பு, போருக்கு தேவையான நிதியை உலகம் முழுவதும் திரட்டியதாகவும், குறிப்பாக சுவிசர்லாந்தில் தமிழர்களிடம் அதிகம் நிதி திரட்டியதாகவும், அரசு தரப்பில் குற்றம்சாட்ட்பட்டது. மேலும், நிதி தர மறுத்த தமிழ் குடும்பங்கள், மிரட்டப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால், ஒருங்கிணைந்த உலகத் தமிழ் கூட்டமைப்புக்கும் விடுதலை புலிகளுக்கும் எந்த தொடர்பும் இருப்பதற்கான போதிய ஆதாரம் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளது.

Advertisement
மேலும், விடுதலைப் புலிகள் குற்றப் பின்னணி கொண்ட அமைப்பு தான் என்பதையும் நிரூபிக்க அரசு தரப்பு மறுத்துள்ளதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

30 ஆண்டுகளாக நடந்து வந்த தமிழ் ஈழ் உரிமை போர் காரணமாக, இலங்கையில் இருந்து சுவிட்சர்லாந்தில் குடியேறிய தமிழர்கள் ஏராளம். 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்த அந்த போரில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சர்வதேச மனித உரிமைகள் ஆணையும், இலங்கை ராணுவம் மீதும், விடுதலைப் புலிகள் மீதும் போர் குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று கூறிவருகிறது.
Advertisement