90 வயதாகும் அவர், கடந்த 1990ம் ஆண்டில் இருந்து ஹுரியத் அமைப்பின் தலைவராக இருந்து வந்தார்.
ஹைலைட்ஸ்
- ஹுரியத் அமைப்பிலிருந்து சையது அகமது ஷா கிலானி ராஜினாமா செய்தார்
- அமைப்பில் தனக்கு எதிராக சதி நடப்பதாக கிலானி குற்றம்சாட்டியுள்ளார்
- அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்பதாக தகவல்
New Delhi/ Jammu: காஷ்மீர் பிரிவினைவாத முக்கிய தலைவராக இருந்து வரும் சையது அலி ஷா கிலானி ஹுரியத் அமைப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். காஷ்மீர் அரசியல் நிகழ்வில் இந்த சம்பவம் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது
90 வயதாகும் அவர், கடந்த 1990ம் ஆண்டில் இருந்து ஹுரியத் அமைப்பின் தலைவராக இருந்து வந்தார். ஆயுட் கால தலைவராக அவர் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2010ல் ஜம்மு காஷ்மீரில் வன்முறை அதிகமாக காணப்பட்டது. அந்த சமயத்தில் இருந்து அவர் பெரும்பாலும் வீட்டுச் சிறையில்தான் தங்க வைக்கப்பட்டுள்ளார். தனது ராஜினாமா குறித்து கிலானி ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
ஹுரியத் மாநாட்டு அமைப்பின் தற்போதைய நிலைமையை கவனத்தில் கொண்டு எனது ராஜினாமாவை நான் அறிவிக்கிறேன். இதுதொடர்பாக விளக்கமான கடிதத்தை அமைப்பில் உள்ள நிர்வாகிகளுக்கு தெரிவித்து விட்டேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் மாதம் நீக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஜம்மு மற்றும் லடாக் என மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதன்பின்னர் கிலானியின் விலகல் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
கிலானி தனது கடிதத்தில், 'ஹுரியத் மாநாட்டு அமைப்பில் நீடித்திருக்க நான் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பலன் அளிக்கவில்லை. இதனால் நான் அமைப்பிலிருந்து விலகுகிறேன். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்பேன். அமைப்பில் நடந்திருக்கும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அமைப்பில் எனக்கு எதிராக சதி நடந்து கொண்டிருந்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்படும் ஹுரியத் பிரிவுடன் இணைந்து நமது அமைப்பு செயல்பட்டது.' என்று கூறியுள்ளார்.
சையது அலி ஷா கிலானி சோப்பூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக 3 முறை இருந்தது. காஷ்மீரில் தீவிரவாத அட்டூழியம் தலைதூக்கிய பின்னர் அவர் தேர்தலில் போட்டியிடுவதில்லை. தற்போது அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.