Read in English
This Article is From Jun 27, 2019

கும்பல் வன்முறையில் பலியான தப்ரிஷின் மனைவிக்கு ரூ. 5 லட்சம் மற்றும் வேலை : டெல்லி வக்ஃபு வாரியம் வழங்குகிறது

இறந்த தப்ரிஸ்ன் மனைவிக்கு 5 லட்சம் நஷ்ட ஈடும் வேலையும் கொடுக்க முன் வந்துள்ளது. மேலும் தப்ரீஸ் அன்சாரியின் மனைவிக்கு சட்ட உதவியையும் வழங்குவதாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

Advertisement
இந்தியா Edited by

அவரைத் தாக்கும்போது ஜெய் ஶ்ரீராம், ஜெய் அனுமன் என்று கூறுமாறு அந்த கும்பல் கட்டாயப்படுத்தியது

New Delhi:

டெல்லி வக்ஃபு வாரியத்தின் தலைவரும் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினருமான அமானத்துல்லா கான், ஜார்கண்டில் கும்பல் வன்முறையினால் பலியான தப்ரீஸின் மனைவிக்கு ரூ. 5 லட்சமும் வேலையும் கொடுக்க முன்வந்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலம், சரைய்கேலாகார்சவன் மாவட்டத்தைச் சேர்ந்த தப்ரீஸ் எனும் 22 வயது இளைஞரை ஒரு கும்பல் பைக் திருடியதாக கடந்த வாரம் கொடூரமாகத் தாக்கியது. அவரைத் தாக்கும்போது ஜெய் ஶ்ரீராம், ஜெய் அனுமன் என்று கூறுமாறு அந்த கும்பல் கட்டாயப்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. படுகாயம் அடைந்த தப்ரிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். 

இறந்த தப்ரிஸ்ன் மனைவிக்கு 5 லட்சம் நஷ்ட ஈடும் வேலையும் கொடுக்க முன் வந்துள்ளது. மேலும் தப்ரீஸ் அன்சாரியின் மனைவிக்கு சட்ட உதவியையும் வழங்குவதாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை ஜார்கண்டில் நடந்த இந்த சம்பவத்திற்கும் வேதனை தெரிவித்ததுடன், இந்த குற்றங்களை புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். 

Advertisement