हिंदी में पढ़ें Read in English
This Article is From Jun 26, 2019

ஜார்கண்ட் சம்பவம் மனித குலத்துக்கு ஏற்பட்ட கலங்கம் - ராகுல் காந்தி

இந்த சம்பவம் குறித்து ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “ஜார்கண்ட் சம்பவம் மனித குலத்துக்கு ஏற்பட்ட கறை. இறந்த வாலிபரின் உடலை 4 நாட்க தங்கள் கட்டுப்பாட்டில் போலீஸார் மறைத்து வைத்திருந்தது கொடுமையானது” என்று கூறியுள்ளார்.

Advertisement
இந்தியா Edited by

மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் பாரதிய ஜனதா தலைவர்கள் மவுனம் காப்பது ஏன்? -ராகுல் காந்தி

Highlights

  • ராகுல் காந்தி இந்த சம்பவத்தை மனித குலத்துக்கு ஏற்பட்ட கலங்கம் என்றார்
  • தப்ரெஸ் அன்சாரி மீது திருடன் என்று கூடி கட்டி வைத்து அடித்தனர்
  • ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர்
Ranchi:

கடந்த வாரம் ஜார்கண்ட் மாநிலத்தில் 24 வயது தபிரெஸ் அன்சாரி என்ற இளைஞனை இருசக்கர வாகனம் திருடியதாக கூறி கும்பல் அவனை அடித்து உதைத்தனர். மேலும் ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் அனுமான் எனக் கூறும் படி கட்டாயப்படுத்தியுள்ளனர். அடித்ததில் பலத்த காயம் அடைந்த அந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “ஜார்கண்ட் சம்பவம் மனித குலத்துக்கு ஏற்பட்ட கறை. இறந்த வாலிபரின் உடலை 4 நாட்க தங்கள் கட்டுப்பாட்டில் போலீஸார் மறைத்து வைத்திருந்தது கொடுமையானது” என்று கூறியுள்ளார். 

இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவியது. அதன் பிறகும் மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் பாரதிய ஜனதா தலைவர்கள் மவுனம் காப்பது ஏன்?  என்று தெரியவில்லை. மவுனம் என்று கருத்து தெரிவித்துள்ளார். 

Advertisement

ஜார்கண்ட் காவல்துறையினர் இந்த வழக்கில் உடன் பணி புரிபவர்களின் பங்கு குறித்தும் மருத்துவரின் பங்கு குறித்து கவனம் செலுத்துகின்றனர். சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு காவல்துறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அன்சாரியின் இறப்பை மறைக்க முற்பட்டதாகவும் அடிபட்டதற்கான சாட்சியங்களை கலைக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. 
 இந்த வழக்கில் 11 கைது செய்யப்பட்டள்ளனர். தப்ரெஸ் அன்சாரியை மரத்தி கட்டி வைத்து அடித்த அவரை தூக்கி எரிந்தவர்களின் ஒரு பகுதியினரை காவல்துறை கைது செய்துள்ளது.

இறந்த இளைஞனின் மனைவி “அவர் முஸ்லீமாக இருந்ததால் இரக்கமின்றி தாக்கப்பட்டார். எனக்கு யாரும் இல்லை, என் கணவர் மட்டுமே எனக்கு ஒரே ஆதரவு. எனக்கு நீதி வேண்டும்” என்று கூறியுள்ளார். 

Advertisement
Advertisement