This Article is From Oct 16, 2019

Philippines பீச்சில Bikini போட்டதுக்கு இப்படியொரு தண்டனையா..?- பரிதாப கதியில் இளம்பெண்!

பிலிப்பைன்ஸ் நாட்டில் பிக்கினி உடையணிந்திருந்த தாய்வான் சுற்றுலாப் பயணி கைது செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டுள்ளார்.

Philippines பீச்சில Bikini போட்டதுக்கு இப்படியொரு தண்டனையா..?- பரிதாப கதியில் இளம்பெண்!

கவர்ச்சியாக பிக்கினி உடையணிந்த பெண் கைது. (Representative Image)

பிலிப்பைன்ஸ் நாட்டிலிருக்கும் கடற்கரையில் நரம்பிழை அளவிலான (String Bikini) பிக்கினி உடையை அணிந்திருந்த தாய்வான் நாடைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி கைது செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டுள்ளார். லின் ட்ஸு டிங் எனும் 26 வயதான இப்பெண், தனது காதலருடன் போராக்கே தீவிலிருக்கும் பூகா கடற்கரைக்கு விடுமுறையை கழிக்கச் சென்றுள்ளார். அவர் அக்டோபர் 9-ஆம் தேதி, தனது விருப்பப்படி மெல்லிய நரம்பு கொண்ட வெள்ளை பிக்கினி உடையில் கடற்கரைக்குச் சென்றார். அந்த உடையே இப்போது பெரும் சர்ச்சை ஏற்பட காரணமாக ஆனது.

பிலிப்பைன்ஸ் நியூஸ் ஏஜென்ஸியின் (PNA) செய்திப்படி, ட்ஸூ டிங் தங்கியிருந்த விடுதியின் பணியாளர், அவர் உடுத்தியிருந்த நீச்சல் உடை சரியானதல்ல என எச்சரித்தப் பிறகும் டிங் அதே உடையில் இருந்தார் எனக் கூறப்பட்டுள்ளது.

பிக்கினி உடையில் எடுக்கப்பட்ட டிங்கின் புகைப்படங்கள் தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி, போராக்கே இன்டர்-ஏஜென்சி புனர்வாழ்வு மேலாண்மை குழு (BIAMRG) என்ற அமைப்பின்படி பிலிப்பைன்ஸ் நாட்டு காவல்துறைக்குத் தெரியவந்துள்ளது.

"ஹோட்டல் நிர்வாகம், இந்த உடையை அணிய வேண்டாம் என்று அவர்களிடம் கூறியும், அவர்கள் ‘இது ஒரு கலை வடிவம்' என்று கூறியுள்ளனர்” என்று BIAMRG குழுவின் தலைவர் நேட்டிவிட் பெர்னார்டினோ PNA-விடம் தெரிவித்தார். மேலும், “அவர்களின் கலாசாரமும், மரபுகளும் எங்கள் நாட்டிற்கு ஒத்துப்போகாது. அவர்கள் எங்களது கலாசாரம், மரபுகள் மற்றும் நல்லொழுக்கங்களையும் மதிக்க வேண்டும்” எனக் கூறினார்.

இந்நிலையில், லின் ட்ஸு டிங் அவரது காதலருடன் வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் போராக்கே தீவிலிருந்து புறப்பட உள்ளனர்.

Click for more trending news


.