கொரோனா பரவல்; தாஜ்மஹாலை திறக்கும் முடிவை திரும்ப பெற்றது டெல்லி அரசு! (Reuters)
ஹைலைட்ஸ்
- கொரோனா பரவல்; தாஜ்மஹாலை திறக்கும் முடிவை திரும்ப பெற்றது டெல்லி அரசு!
- கொரோனா வைரஸ் நோய்த்தொற்று நோய் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.
- நாட்டில் நேற்று ஒரே நாளில் புதிதாக 24,850 பேருக்கு கொரோனா பாதிப்பு
New Delhi/Agra: தாஜ்மஹாலை காண வரும் பார்வையாளர்களிடமிருந்து ஆக்ராவில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபயாம் உள்ளதால், தாஜ்மஹாலை மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டதை அரசு திரும்ப பெற்றுள்ளது.
ஆக்ராவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நினைவு இடங்களிலும் ஊரடங்கு தடையை நீட்டிக்க உள்ளூர் அதிகாரிகள் நேற்றை தினம் தாமதமாக ஒரு புதிய ஆலோசனையை வெளியிட்டனர். ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசு உத்தரவில் மார்ச் மாதத்திலிருந்து மூடப்பட்ட நினைவுச்சின்னங்களுக்கான லாக்டவுன் கால அளவுக் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.
இந்தியாவின் கடந்த மூன்று மாதத்தில், கொரோனா வைரஸ் நோய்த்தொற்று நோய் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.
நேற்று ஒரே நாளில் புதிதாக 24,850 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல், 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, இந்தியாவின் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 673,165 ஆக உயர்ந்தது, இது உலகளவில் மூன்றாவது பாதிப்புள்ள நாடாக இருந்த ரஷ்யாவை பின்னுக்குதள்ளி இந்தியா தற்போது 3வது இடத்தை பெற்றுள்ளது.
சர்வதேச விமான போக்குவரத்துகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு போக்குவரத்து மட்டும் இயங்கி வருகின்றன. இதனால், பார்வையாளர்கள் சில பிரபலமான இடங்களுக்கு திரும்பிச் செல்லத் தொடங்குவார்கள் என்று அரசு நம்புகிறது.
கட்டுப்பாட்டு மண்டலங்கள், வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்ட பகுதிகள், கடுமையான லாக்டவுனின் கீழ் உள்ளன, அங்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.
"தாஜ் மஹாலை சுற்றியுள்ள கடைகள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளிட்டவை மூடப்பட்டிருப்பதால் நாங்கள் இங்கு பார்வையாளர்களை எதிர்பார்க்கவில்லை" என்று உள்ளூர் மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.